
தயார்
இப்படிப்பட்ட நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் இடையே கடுமையான மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. கொரோனா விதிகளை மீறியதாக கூறி ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து இந்திய வீரர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஹோட்டலில் உணவு உட்கொண்டதற்காகவும், அங்கு ரசிகர் ஒருவரை கட்டிபிடித்ததற்காகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மோதல்
இதுதான் தற்போது இரண்டு அணிகளுக்கும் இடையிலான மோதலுக்கு காரணமாக மாறியுள்ளது. இந்திய அணி வீரர்களை தனிமைப்படுத்திக்கொள்ளும்படி பிசிசிஐ கூறவில்லை. ஆஸ்திரேலிய அமைப்புதான் இந்திய அணி வீரர்களை தனிமைப்படுத்தும்படி கூறியது. வீரர்களின் பாதுகாப்பு கருதி ஆஸ்திரேலிய அணி நிர்வாகம்தான் இந்த உத்தரவை பிறப்பித்தது.

ஆஸ்திரேலிய அணி நிர்வாகம்
இந்த நிலையில் ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்த 5 வீரர்களும் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட அனுமதிக்கப்படுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. பாதுகாப்பு விஷயங்களை காரணம் காட்டி, ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் இந்த 5 வீரர்களையும் தடுக்க முயற்சிக்கலாம் என்று தகவல்கள் வருகிறது. இது ஆஸ்திரேலிய அணிக்கும் ஒரு வகையில் சாதகமாக இருக்கும்.

சாதகம்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், இந்திய அணி வீரர்களை ஆஸ்திரேலிய அணி தடுக்காது என்று நம்புகிறோம். இந்த 5 வீரர்களில் சிலர் கண்டிப்பாக 3வது டெஸ்டில் ஆடுவார்கள். இதை ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் தடுக்க முடியாது.

விளைவு
அதையும் மீறி ஆஸ்திரேலியா நிர்வாகம் செயல்பட்டால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும். இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்திய வீரர்கள் எந்த விதமான விதிகளையும் மீறியதாக நாங்கள் நினைக்கவில்லை, என்று கூறியுள்ளது. இதனால் இரண்டு நாட்டு அணிகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications