Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“விடைபெறுகிறேன்” டி20 உலகக் கோப்பை நாயகன் ஆண்ட்ரே ரஸ்ஸல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

ஜமைக்கா: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் புகழ்பெற்ற ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான ஆண்ட்ரே ரஸ்ஸல் ஜமைக்காவை சேர்ந்தவர் ஆவார். வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடை கொடுக்கவுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகள் ஜூலை 20 மற்றும் 22 ஆம் தேதிகளில் ரஸ்ஸலின் சொந்த ஊர் மைதானமான கிங்ஸ்டன், சபீனா பார்க்கில் நடைபெறவுள்ளன. 2010 நவம்பர் 15 ஆம் தேதி இலங்கைக்கு எதிராக தனது சர்வதேச அறிமுகத்தைப் பெற்ற ரஸ்ஸல், இதுவரை ஒரு டெஸ்ட், 56 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

Andre Russell West Indies T20 cricket WI vs AUS

ஆண்ட்ரே ரஸ்ஸல், வெஸ்ட் இண்டீஸ் அணி 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை வென்றபோது முக்கிய பங்கு வகித்தார். 2016 இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முக்கியமான கட்டத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டமிழக்கச் செய்து முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தார். 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் அவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அவரது ஓய்வு முடிவு வெளியாகி உள்ளது.

"வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியது எனது வாழ்க்கையின் மிகவும் பெருமையான சாதனைகளில் ஒன்றாகும்" என்று ஆண்ட்ரே ரஸ்ஸல் தனது ஓய்வு குறித்துத் தெரிவித்துள்ளார்.

மேலும், "ஒரு சிறுவனாக நான் இந்த நிலையை எட்டுவேன் என்று எதிர்பார்க்கவில்லை, ஆனால், விளையாடத் தொடங்கி, விளையாட்டை நேசிக்கும்போது, நாம் எதை அடையலாம் என்பதை உணர்வோம். அது என்னை சிறந்தவனாக மாறத் தூண்டியது, ஏனென்றால் நான் இந்த அணிக்கு ஒரு முத்திரையைப் பதிக்க விரும்பினேன், மேலும் மற்றவர்களுக்கு ஒரு உத்வேகமாக மாற விரும்பினேன்" என்று ரஸ்ஸல் கூறினார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள வெஸ்ட்இண்டீஸ் டி20 அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் முன்னாள் கேப்டன் ரோவ்மன் பவல், ரொமாரியோ ஷெப்பர்ட், ஷிம்ரான் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், எவின் லூயிஸ், மற்றும் பிராண்டன் கிங் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அணியில் புதிய முகங்களாக ஜூவல் ஆண்ட்ரூ மற்றும் ஜெடியாஹ் பிளேட்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் இரண்டு போட்டிகளில் மட்டும் ஆண்ட்ரே ரஸ்ஸல் பங்கேற்பார். கடைசி மூன்று போட்டிகளில் ரஸ்ஸலுக்கு பதிலாக மேத்யூ ஃபோர்டு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Story first published: Thursday, July 17, 2025, 7:53 [IST]
Other articles published on Jul 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+