Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏம்ப்பா சாமி.. இதுக்குப் பேருதான் உங்க ஊர்ல உடற்பயிற்சியா.. ரொம்ப தமாஷே இருக்கே

கிங்ஸ்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரரும், ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்காக விளையாடுபவருமான ஆன்ட்ரே ரஸ்ஸல் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

Recommended Video

IPL 2020 : 5 incidents that changed IPL history

இதில் என்ன தமாஷ்னா அவர் உடற்பயிற்சி செய்வது போல தெரியவில்லை. மாறாக ஜாலியாக டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். அதைத்தான் வீடியோவாக போட்டு விட்டுள்ளார்.

ஆன்ட்ரே ரஸ்ஸல் அருமையான ஆல்-ரவுண்டர் ஆவார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு மட்டுமல்லாமல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அருமையான ஆட்டத்தைக் கொடுத்தவர்.

ரஸ்ஸல் ஜிம் வீடியோ

தற்போது கிரிக்கெட் போட்டிகள் இல்லாமல் போய் விட்டதால் ஆன்ட்ரே ரஸ்ஸலும் தனது வீட்டோடு முடங்கிக் கிடக்கிறார். இருந்தாலும் உடற்பயிற்சி, டான்ஸ், பாட்டு என்று அவரும் ஜாலியாகத்தான் நேரத்தை போக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ போட்டுள்ளார். அதுதான் இப்போது வைரலாகி வருகிறது.

ஜிம்மில் டான்ஸுடன் உடற்பயிற்சி

ஜிம்மில் டான்ஸுடன் உடற்பயிற்சி

அந்த வீடியோ ஆரம்பிக்கும்போது ஏதோ உடற்பயிற்சி செய்வது போல இருக்கிறது. ஆனால் அப்படியே அவர் முன்னோக்கி ஓடுகிறார். ஜம்ப் பண்ணுகிறார். டான்ஸ் மூவ் கொடுக்கிறார். என்னென்னவோ செய்கிறார். பார்க்கவே படு தமாஷாக இருக்கிறது. இசையுடன் கூடிய நல்லதொரு பொழுது போக்குக் கூடம் போல அது தெரிகிறது. உடற்பயிற்சியைத் தவிர வேறு எல்லாமே செய்வார்கள் போல.

ஜாலியாக உடற்பயிற்சி

ஜாலியாக உடற்பயிற்சி

அந்த ஜிம்மில் உள்ள எல்லாப் பேருமே ஜாலியாக பேசிக் கொண்டும், பாடிக் கொண்டும், டான்ஸ் ஆடிக் கொண்டும் உடற்பயிற்சி செய்கிறார்கள். லாக்டவுன் டென்ஷனைக் குறைக்க இப்படியெல்லாம் இருந்தால்தான் நல்லது. இல்லாவிட்டால் ரொம்ப போரடித்து விடும். மன உளைச்சல் கூடி விடும். அதற்கு இப்படி ரிலாக்ஸ்டாக இருப்பது நல்லதுதான். அப்படித்தான் தெரிகிறது ரஸ்ஸலைப் பார்த்தாலும்.

கிரிக்கெட் ஆடி பயிற்சி

அதேபோல இன்னொரு வீடியோவில் தனது வீட்டு வளாகத்திற்குள்ளேயே கிரிக்கெட் ஆடுகிறார் ரஸ்ஸல். ஐபிஎல் போட்டிகள் இலங்கையில் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே அதற்கான பிராக்டிஸா இது என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் விளையாட்டு வீரர் என்பதால் டச் போய் விடக் கூடாது என்பதாலும், எப்போது போட்டி ஆரம்பித்தாலும் விளையாடத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் விளையாட்டு வீரர்கள் இதுபோல தொடர்ந்து பயிற்சியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 17, 2020, 19:41 [IST]
Other articles published on Apr 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+