For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ப்ளூவா? பிங்க்கா? இது செமயா இருக்கே.. கர்ப்பமான மனைவியுடன் பலூன் கேம் ஆடிய ரஸ்ஸல்.. வைரல் வீடியோ!

Recommended Video

கர்ப்பமான மனைவியுடன் பலூன் கேம் ஆடிய ரஸ்ஸல்.. வைரல் வீடியோ!

ஜமைக்கா : தன் கர்ப்பமான மனைவியுடன் பலூனை வைத்து ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆடிய பலூன் விளையாட்டு வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரஸ்ஸல்-இன் மனைவி கர்ப்பமாக உள்ளார்.

அதை சில நாட்கள் முன்பு சமூக வலைதளங்களில் அறிவித்த ஆண்ட்ரே ரஸ்ஸல், தன் மனைவிக்கும், பிறக்கப் போகும் குழந்தைக்கும் பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார்.

பலூன் விளையாட்டு

பலூன் விளையாட்டு

அந்தப் பார்ட்டியில் தான் ப்ளூ மற்றும் பிங்க் நிறங்களில் புகை வரக் கூடிய இரண்டு ஸ்மோக் பலூன்களை மேலே கட்டி வைத்து மனைவியுடன் விளையாடி உள்ளார் ஆண்ட்ரே ரஸ்ஸல்.

மனைவி லோரா

மனைவி லோரா

ஆண்ட்ரே ரஸ்ஸல் ஜமைக்காவை சேர்ந்தவர். 31 வயதாகும் அவருக்கு ஜேசிம் லோரா என்ற மனைவி இருக்கிறார். கடந்த ஐபிஎல் தொடரின் போது அவர் ரஸ்ஸல் ஆடும் போட்டிகளின் போது மைதானத்திற்கு வந்து அவரை உற்சாகப்படுத்தி வந்தார்.

முதல் குழந்தை உற்சாகம்

முதல் குழந்தை உற்சாகம்

சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார் ஆண்ட்ரே ரஸ்ஸல். முதல் குழந்தை என்பதால் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார். இதைக் கொண்டாட முடிவு செய்தஅவர், பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். .

பார்ட்டி விளையாட்டு

பார்ட்டி விளையாட்டு

அந்தப் பார்ட்டியில் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என தெரிந்து கொள்ள ஒரு வேடிக்கை விளையாட்டை ஆடியது ரஸ்ஸல் - லோரா தம்பதி. நம் ஊரில் கண்ணைக் கட்டி உறி அடிப்பது போல, பலூனை உடைப்பது தான் அந்த விளையாட்டு.

இரண்டு பலூன்கள்

இரண்டு பலூன்கள்

மேலே ப்ளூ மற்றும் பிங்க் நிற புகை எழுப்பும் இரண்டு பலூன்கள் கட்டப்பட்டு இருக்கும். ரஸ்ஸல் பேட்டிங் செய்வார்.அவரது மனைவி பந்து வீசுவார். ரஸ்ஸல் அடிக்கும் போது பந்து எந்த நிற பலூனை உடைக்கிறதோ அதை வைத்து பிறக்கப் போகும் குழந்தையை அடையாளம் காணுவார்கள்.

ப்ளூ யாருப்பா?

ப்ளூ யாருப்பா?

அதன் படி ப்ளூ உடைந்தால் ஆண் குழந்தை. பிங்க் உடைந்தால் பெண் குழந்தை. அந்த வீடியோவில் இருக்கும் காட்சி இது தான். ரஸ்ஸல் பேட்டிங் செய்யும் முன் யாருக்கு ப்ளூ வேண்டும் என கேட்கிறார்.

பந்தை எறிந்தார்

பந்தை எறிந்தார்

சுற்றி இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் பலர் ப்ளூ தான் வேண்டும் என்கிறார்கள். அதே சமயம், பிங்க் வேண்டும் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் இரட்டையர்கள் வேண்டும் என்கிறார்கள். பின், அவரது மனைவி லோரா பந்தை எறிகிறார்.

உடைந்தது எந்த பலூன்?

உடைந்தது எந்த பலூன்?

ரஸ்ஸல் அடித்த வேகத்தில் பிங்க் நிற பலூன் உடைந்து, பிங்க் நிறப் புகை எழுகிறது. அந்த இடமே உற்சாகக் குரல்களில் தெறிக்கிறது, லோரா உட்பட அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தார்கள்.

ரஸ்ஸல் கருத்து

இந்த விளையாட்டு வீடியோ காட்சியை வெளியிட்ட ரஸ்ஸல், பெண் குழந்தை தான் பிறக்கப் போகிறது. இந்து என் வாழ்வின் மற்றொரு ஆசிர்வாதம். ஆணா? பெண்ணா? என்பது முக்கியம் இல்லை. கடவுளிடம் ஆரோக்கியமான குழந்தை வேண்டும் என்று தான் கேட்டு வருகிறேன் என கூறி இருக்கிறார்.

பரவும் நிற விளையாட்டு

பரவும் நிற விளையாட்டு

பல நாடுகளில் பிறக்கப் போகும் குழந்தை பாலினத்தை மருத்துவ உதவியுடன் தெரிந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் அது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். எனினும், எல்லோருக்கும் என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்ற ஆர்வம் இருக்கும். அதை இது போன்ற மகிழ்ச்சி அளிக்கும் விளையாட்டு மூலம் தீர்த்துக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.

Story first published: Friday, September 20, 2019, 12:53 [IST]
Other articles published on Sep 20, 2019
English summary
Andre Russell finds the gender of his first baby by playing a game with his pregnant wife. That video becomes viral in Instagram.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+