ஐபிஎல் ஏலம்... ஏஞ்செலோ மேத்யூஸ், ஆண்டர்சனை கைப்பற்றியது டெல்லி டேர் டெவில்ஸ்
பெங்களூரு: ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில் 2 கோடி ரூபாய்க்கு இலங்கை வீரர் ஏஞ்செலோ மேத்யூஸை டெல்லி அணி வாங்கியுள்ளது. நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சனையும் ஒரு கோடி ரூபாய்க்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி வாங்கியுள்ளது.
இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் 20 ஓவர் போட்டிகள் இந்தியாவில் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி தொடங்கவுள்ளது. மே மாதம் 21 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் பெங்களூரூவில் இன்று நடைபெற்றது. இதில் 2 கோடி ரூபாய்க்கு இலங்கை வீரர் ஏஞ்செலோ மேத்யூஸை டெல்லி அணி வாங்கியுள்ளது.
இதேபோல் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சனையும் ஒரு கோடி ரூபாய்க்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி வாங்கியுள்ளது. இவர்கள் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடவுள்ளனர்.
Story first published: Monday, February 20, 2017, 14:29 [IST]
Other articles published on Feb 20, 2017


Click it and Unblock the Notifications