Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கோடிகளில் சம்பளம்.. பிசிசிஐ வெளியிட்ட மலைக்க வைக்கும் பட்டியல்

பெங்களூரு: பிசிசிஐ சார்பில் இந்திய கிரிக்கெட் அணியினருக்கு ஜூன் மாத பேமெண்ட் யார் யாருக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்று, அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, விராட் கோஹ்லி ரூ.44 கோடியை பெற்றுள்ளார். மேலும் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

Anil Kumble receives Rs 48 lakh from BCCI, Rohit Sharma gets Rs 1.12 crore

முன்னாள் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, சென்ற ஏப்ரல் மாத கட்டணமாக ரூ. 48,75,000 லட்சம் பெற்றுள்ளார். அவரின் ஓராண்டு சம்பளம் ரூ. 6.25 கோடியாகும். கும்ப்ளே தனது பயிற்சியாளர் பொறுப்பை, ஐசிசி சாம்பியன் டிராபி போட்டியோடு ராஜினாமா செய்தார்.

அவருக்கும் கேப்டன் விராட் கோஹ்லிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் தனது பதவியை கும்ப்ளே ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து விராட் கோஹ்லியின் முழு ஆதரவோடு ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 2019ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் வரை இந்திய அணியின் கோச்சாக சாஸ்திரி செயல்படுவார்.

பேட்ஸ் மேன் ரோஹித் சர்மா 2015-16ம் ஆண்டுகளில் விளையாடிய எல்லா போட்டிகளுக்கும் சேர்த்து ரூ. 1.12 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளார்.

இதே ஆண்டில், டெஸ்ட் துணை கேப்டன் அஜின்கியா ரஹானே ரூ.1.10கோடியும், ரவிச்சந்திர அஸ்வின் ரூ. 1.01கோடியும் சம்பளம் பெற்றுள்ளனர்.

பிசிசிஐ வெளியிட்ட சம்பள பட்டியல்:

• அனில் கும்ப்ளே - ரூ. 48,75,000 லட்சம்
• விராட் கோஹ்லி - ரூ.44 கோடி
• ரோஹித் சர்மா - ரூ. 1.12 கோடி
• மனீஷ் பாண்டே - ரூ. 29,70,112 லட்சம்
• சுரேஷ் ரெய்னா - ரூ. 32,82,757 லட்சம்
• அமித் மிஸ்ரா ரூ.- 42, 20,689 லட்சம்
• புவனேஷ்வர் குமார் - ரூ. 67,99,997 லட்சம்
• உமேஷ் யாதவ் - ரூ. 83,63,214 லட்சம்
• புவனேஷ் - ரூ.28,65,659 லட்சம்
• மிஷ்ரா - ரூ. 32, 12,059 லட்சம்
• ரவிச்சந்திரன் அஸ்வின் - ரூ.34,79,729 லட்சம்
• முரளி விஜய் - ரூ. 34, 79,729 லட்சம்
• அஸ்வின் - ரூ. 1, 01,60,915 கோடி
• கே.எல்.ராகுல் - ரூ . 42,20,689 லட்சம்

2017 போட்டிகளின் அம்பயர் மற்றும் ரெபிரீகளுக்கும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ரூ. 2,970,112 மனீஷ் பாண்டேவும், ரூ. 3,282,757 சுரேஷ் ரெய்னாவும், ரூ. 4,220,689 அமித் மிஸ்ராவும், ரூ. 6,799,997 புவனேஷ்வர் குமாரும், ரூ. 8,363,214 உமேஷ் யாதவும், ரூ. 11,255,167 ரோஹித் ஷர்மாவும் , ரூ.2,865,659 புவனேஷும் பெற்றுள்ளனர்.

Story first published: Tuesday, July 18, 2017, 18:43 [IST]
Other articles published on Jul 18, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+