Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி வெற்றியை பறித்தது 'மிஸ்சான' 100 ஓவர்கள்தான்.. அனில் கும்ப்ளே ஆதங்கம்!

ஜமைக்கா: 4 டெஸ்ட்டுகளில் ஆடுவதற்காக மேற்கு இந்திய தீவுகளுக்கு, இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் சென்றுள்ளது. முதல் டெஸ்டை இந்தியா வென்ற நிலையில், ஜமைக்காவில் 2வது டெஸ்ட் நடந்தது. முதலில் மே.இ.தீவுகள் பேட் செய்தது.

மேற்கு இந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸ்சில் 196 ரன்களுக்கே ஆல்-அவுட் ஆனது. அஸ்வின் வீழ்த்திய 5 விக்கெட்டுகளும் இதில் முக்கிய பங்கு வகித்தது.

2வது இன்னிங்சில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 388 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்ட நேரம் முடிந்ததால் போட்டி டிராவில் முடிந்தது.

விடாத மழை

விடாத மழை

வெற்றி பெற வேண்டிய நிலையில் இந்திய அணி இருந்தபோது, 3வது நாள் ஆட்ட நேரத்தின் டீ இடைவேளைக்கு பிறகும், 4வது நாளில் சுமார் பாதி நாளும் மழையால் ஆட்டம் தடைபட்டது. அல்லது இந்தியா இன்னி்ங்ஸ் வெற்றியை சுவைக்கவே வாய்ப்பு வசதியாக இருந்தது. இதை இந்திய பயிற்சியாளர் அனில் கும்ப்ளேயும் சுட்டி காட்டியுள்ளார்.

பாராட்டு

பாராட்டு

போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் கும்ப்ளே கூறியது: இந்த போட்டியை வெல்ல வேண்டும் என்பதுதான் இந்திய அணியின் முயற்சி. 4வது நாள் ஆட்டத்தின்போது இந்தியா வலுவான நிலையில்தான் இருந்தது. இருப்பினும், போட்டியை டிரா செய்ததற்கு மேற்கு இந்திய தீவுகள் வீரர்களின் சிறந்த ஆட்டம் காரணம்.

கூடுதல் ஓவர் போச்சு

கூடுதல் ஓவர் போச்சு

இந்திய பவுலர்கள் சிறப்பான ரிதமில் இருந்தனர். ஆனால் 4வது நாள் டீ இடைவேளைக்கு பிறகு ஆட்டத்தை தொடர முடியவில்லை. கூடுதலாக ஓவர்கள் வீசப்பட்டிருந்தால் மே.இ.தீவுகளை ஆல்-அவுட் செய்திருக்க முடியும்.

வெற்றி வாய்ப்பில் பாதிப்பு

வெற்றி வாய்ப்பில் பாதிப்பு

இதுபோல பல்வேறு விஷயங்களும் போட்டி ரிசல்ட்டை பாதித்து விட்டன. ரோஸ்டன் சேஸ் தனது 2வது டெஸ்ட் போட்டியில் இவ்வளவு சிறப்பாக ஆடியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

டிக்ளேர் பிரச்சினையில்லை

டிக்ளேர் பிரச்சினையில்லை

முன்கூட்டியே இந்தியா டிக்ளேர் செய்திருந்தால் வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்குமா என கேட்கிறார்கள். வெறும் 160 ரன்கள் முன்னிலை பெற்றதுமே டிக்ளேர் செய்திருந்தால், பேட்டிங் ஆட கஷ்டமாக இருக்க கூடிய 5வது நாள் பிட்சில் இந்தியா பேட் செய்ய வேண்டி வந்திருக்கும். அது ஆபத்து என்பதால்தான் டிக்ளேர் செய்வதற்கு நேரம் எடுத்துக்கொண்டோம்.

100 ஓவர்கள்

100 ஓவர்கள்

இந்திய அணியின் செயல்பாட்டில் எந்த குறையுமே கிடையாது. ஆட்டத்தின் 4வது மற்றும் 5வது நாட்களில் மழையால், சுமார் 100 ஓவர்கள் விடுபட்டு போய்விட்டது. இதுதான் வெற்றியை வசப்படுத்த முடியாததற்கு முக்கிய காரணம். இவ்வாறு அனில் கும்ப்ளே தெரிவித்தார்.

Story first published: Thursday, August 4, 2016, 13:34 [IST]
Other articles published on Aug 4, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+