Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேலும் ஒரு ஸ்டார் வீரருக்கு காயம்.. வங்கதேச டெஸ்டில் இந்தியாவுக்கு பெரும் அடி.. இனி என்ன செய்வார்கள்

சட்டோகிராம்: வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மேலும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை ( டிசம்பர் 14 ) நடைபெறவுள்ளது. சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரில் அதற்கான பதிலடியை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறது.

தொடர் சிக்கல்கள்

தொடர் சிக்கல்கள்

இந்த முக்கியமான தொடரில் தான் இந்தியாவுக்கு தொடக்கத்தில் இருந்தே சிக்கலாக உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இதே போல முன்னணி பவுலர்கள் முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் காயத்தால் விலகியுள்ளனர். இவர்களுக்கு மாற்றாக இளம் வீரர்களே அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரு பாதிப்பு

மேலும் ஒரு பாதிப்பு

இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மாவின் இடத்தில் களமிறங்கவிருந்த சுப்மன் கில்-க்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பார்க்காத விதமாக பந்து கையில் பட்டு காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவருக்கு பேண்டேஜ்களை போட்டுவிட்டு, பிசியொதெரபிஸ்ட்கள் முதலுதவி செய்துள்ளனர்.

மாற்று வீரர்

மாற்று வீரர்

முதல் டெஸ்ட் போட்டிக்கான உடற்தகுதி தேர்வு இன்று இரவு அல்லது நாளை அதிகாலை நடைபெறும். இதில் சுப்மன் கில் முழு உடற்தகுதி இல்லாமல் விலகுவார் என தெரிகிறது. ஒருவேளை அப்படி நடந்தால் ஓப்பனிங்கில் ஆட அபிமன்யு ஈஸ்வர் தயாராக இருக்கிறார். சமீபத்தில் நடந்த வங்கதேச ஏ அணியுடனான டெஸ்டில் தொடர்ச்சியாக 2 சதங்களை அடித்திருந்த இவர், கில்லின் இடத்தை சரியாக நிரப்புவார் என்ற நம்பிக்கையும் ரசிகர்களுக்கு உள்ளது.

 வாழ்வா? சாவா? ஆட்டம்

வாழ்வா? சாவா? ஆட்டம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 4வது இடத்தில் உள்ளது. இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் மீதமுள்ள 6 போட்டிகளில் குறைந்தது 5 போட்டிகளில் வெற்றி பெற்றே தீர வேண்டும். வாய்ப்பை பிரகாசமாக்க 6 வெற்றிகள் தேவை. எனவே இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்தியாவுக்கு வாழ்வா? சாவா? கட்டமாக தான் உள்ளது.

Story first published: Tuesday, December 13, 2022, 20:13 [IST]
Other articles published on Dec 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+