Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

150 கிமீ வேகத்தில் வீசப்பட்ட பந்து.. பறந்த ஸ்டம்புகள்.. தைரியமாக ரிவர்ஸ் ஸ்வீப் செய்த தமிழக வீரர்

டெல்லி : ஐபிஎல் தொடரில் டெல்லி அணி வீரர் நோக்கியா 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி ஸ்டம்புகளை பறக்கவிட்டார். டாஸ் வென்று முதலில் பந்துவீசிய குஜராத் அணி அபாரமாக பந்துவீசி டெல்லி அணியை 162 ரன்களில் சுருண்டது.

இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது.

Anrich Nortje Fiery spell destroy gujarat openers and sai sudharasan gives terrific reply

கலில் அகமது வீசிய முதல் ஓவரில் விரித்திமான் சாஹா, பவுண்டரி சிக்சர்கள் அடித்து கெத்து காட்டினார். முகேஷ் குமார் ஓவரிலும் ரன்கள் பறந்தது. இதனைத் தொடர்ந்து சிஎஸ்கேக்கு எதிராக அபாரமாக அடித்தது போல, இன்றைய ஆட்டத்திலும் குஜராத் அணி அபாரமாக விளையாட அடித்தளம் போட்டது.

இதன் பிறகு ஆண்டிரிச் நோக்கியா கையில் பந்து சென்றது. பெரிய மீசையை வைத்து கொண்டு ஜல்லிக்கட்டு காளை போல் ஓடி வந்து பந்தை ஸ்டம்பை குறிவைத்து ஆண்ரிச் நோக்கியா வீசினார். இதனை கணிக்க முடியாமல் முதலில் சாஹா 14 ரன்களில் போல்ட் ஆனார். அதன் பிறகு அதிரடி வீரர் சுப்மன் கில் ஸ்டம்புகளையும் நோக்கியா தெறிக்கவிட்டார்.

இதனையடுத்து தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன், நோக்கியாவை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. அப்போது நல்ல அதிர்ஷ்டமாக அவருக்கு ஒரு ஃபிரி ஹிட் கிடைத்தது. அப்போது நோக்கியா மீண்டும் ஸ்டம்பை குறிவைத்து பந்து வீச, அதனை சோய் சுதர்சன் ரிவர்ஸ் ஸ்விப் செய்து பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். இதனை பார்த்ததும் எதிர் முனையில் நின்ற ஹர்திக் பாண்டியா வாய் அடைத்து போய் நின்று பாராட்டினார்.

Story first published: Tuesday, April 4, 2023, 23:11 [IST]
Other articles published on Apr 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+