Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தெறித்த "மிடில் ஸ்டெம்ப்".. ரிக்கி பாண்டிங் அமைத்த "வியூகம்" - சுண்டெலி போல் சிக்கிய டு பிளசிஸ்

துபாய்: டெல்லிக்கு எதிரான குவாலிஃபயர் 1 போட்டியில், 173 ரன்களை சேஸிங் செய்து வரும் சிஎஸ்கே டு பிளசிஸ் விக்கெட்டை முதல் ஓவரிலேயே இழந்துவிட்டது.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று நடைபெற்று வரும் Qualifier 1 ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுக்க, வெற்றிக்கான முனைப்போடு ஆடி வருகிறது சிஎஸ்கே.

 அணி விவரம்

அணி விவரம்

இப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (w/சc), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய வீரர்கள் இடம்பெற்றனர். அதேசமயம், டெல்லி அணியில் ஒரு முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அந்த அணியில், ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் (w/c), ஸ்ரேயாஸ் ஐயர், ஷிம்ரோன் ஹெட்மயர், டாம் கர்ரன், அக்ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே ஆகிய வீரர்கள் இடம் பெற்றனர். டெல்லி அணியில், ரிபல் படேலுக்கு பதிலாக டாம் கர்ரன் சேர்க்கப்பட்டனர். சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரெய்னா இல்லாததை விட, மிடில் ஆர்டரில் சொதப்பி வரும் உத்தப்பாவுக்கு பதில், இளம் வீரர் ஜெகதீசன் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் உத்தப்பாவுக்கே தோனி வாய்ப்பு அளித்திருப்பது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

 ரிஷப் - ஹெட்மயர்

ரிஷப் - ஹெட்மயர்

ஷிகர் தவான் 7 ரன்களில் ஹேசில்வுட் ஓவரில் அவுட்டானாலும், ப்ரித்வி 'ஏவுகணை' இன்று சீறிப் பாய்ந்தது. சென்னை பவுலர்களாய் பாரபட்சமின்றி விட்டு விளாசினார். 34 பந்துகளில் 60 ரன்கள் குவித்த ப்ரித்வி, ஜடேஜா ஓவரில் கேட்ச்சானார். எனினும், ஷ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் ஹேசில்வுட் பந்தில் கேட்ச்சாகி ஏமாற்றம் அளித்தார். இதனால் டெல்லி அணி, 80 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதன் பிறகு, ரிஷப் பண்ட் - ஹெட்மயர் ஜோடி சரிந்த அணியை மீட்டெடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக 'சந்திரமுகி'யாக மாறி வரும் ஹெட்மயர், இன்றைய போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தினார். பண்ட் - ஹெட்மயர் ஜோடி 17வது ஓவரில், 6வது விக்கெட்டுக்கு அரைசதம் விளாசியது. இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் சொதப்பி இருந்தாலும், டெல்லி நிலைமை பரிதாப நிலைக்கு சென்றிருக்கும்.

 கடினமான இலக்கு

கடினமான இலக்கு

ஆனால், இது 'பிளே ஆஃப்' என்ற பொறுப்பை உணர்ந்து இருவரும் மிக நேர்த்தியாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதிக் கட்டத்தில் ரிஷப் பண்ட் சென்னை பவுலர்களை விட்டு விளாசி, சென்னை பவுலர்கள் திக்கற்று வந்தனர். ஒற்றைக் கையில் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். சிறப்பாக ஆடிய ஹெட்மயர், 24 பந்துகளில் 37 ரன்கள் விளாசி பிராவோ ஓவரில் கேட்ச்சானார். இருந்தாலும், 'நான் இங்க தான் இருக்கேன் பாஸ்' மோடில் இருந்த ரிஷப் பண்ட், 35 பந்துகளில் 51 ரன்கள் குவிக்க, டெல்லி கேபிட்டல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. மற்ற மைதானங்களை ஒப்பிடுகையில், அளவில் பெரிய இந்த துபாய் ஸ்டேடியத்தில், 173 ரன்கள் இலக்கு என்பது உண்மையிலேயே மிகக் கடினமான இலக்கு தான்.

 துப்பாக்கியின் தோட்டா

துப்பாக்கியின் தோட்டா

இந்நிலையில், அசுர வேக ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை கொண்டிருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை, சென்னை பேட்ஸ்மேன்களால் எதிர்கொள்ள முடியுமா என்ற மிகப்பெரிய கேள்வி நிலவியது. அதற்கு ஏற்றார் போல், முதல் ஓவரிலேயே, டு பிளஸிஸை நோர்க்யா காலி செய்தார். ஆட்டத்தின் முதல் ஓவரில், மணிக்கு 147.5 கி.மீ வேகத்தில் வந்த லோ ஹைட் பந்தை, லெக் சைடில் தட்ட நினைத்த டு பிளசிஸ் உண்மையில் ஏமாந்து போனார். ஆம், மிடில் ஸ்டெம்ப்பை பதம் பார்த்தது நோர்க்யாவின் அந்த 'Bullet'. துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டாவை, ஹாலிவுட் பட ஹீரோக்கள் தான் தடுக்க முடியும். பிராக்டிக்கலாக வாய்ப்பில்லை தானே! பிறகு, டு பிளஸிசால் மட்டும் எப்படி தடுக்க முடியும்?

 சிக்கிய டு பிளசிஸ்

சிக்கிய டு பிளசிஸ்

எனினும், சென்னை அணியின் ஓவ்வொரு வீரர் குறித்தும் துல்லியமாக ஆராய்ந்து வீரர்களை மெருகேற்றி வைத்திருந்தார் கோச் ரிக்கி பாண்டிங். அதில் டு பிளசிஸ் மட்டும் விதிவிலக்கல்ல. அதிவேக பந்துகளை க்ளீயர் செய்வதில் பிளசிஸ் கெட்டிக்காரர் என்றாலும், கொஞ்சம் உயரம் குறைவாக வீசினால் அவர் சிரமப்படுவார் என்பதே பாண்டிங் அமைத்த ஸ்டிராடஜி என்று தெரிகிறது. அதோடு சேர்த்து வேகமும் இருந்தால், நிச்சயம் பிளசிஸ்-க்கு டஃப் கொடுக்கலாம் என்று அணி மீட்டிங்கிலும் பேசியிருந்ததாக தெரிகிறது. அதை அப்படியே கச்சிதமாக செய்து காட்டியிருக்கிறார் நோர்க்யா.

Story first published: Sunday, October 10, 2021, 22:27 [IST]
Other articles published on Oct 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+