
பிரமிக்க வைக்கிறது
இந்த நிலையில், அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள பதிவில், என் அசத்தலான அழகனே. இன்று நீ பலரின் வாழ்க்கைக்கு அதுவும் தீபாவளிக்கு முன்பு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறாய். நீ எப்போதும் அதிசியம் நிறைந்த மனிதன் என் அன்பே என்று குறிப்பிட்டுள்ள அனுஷ்கா சர்மா, உன்னுடைய வெறி, குறிக்கோள், மற்றும் தன்னம்பிக்கை என்னை பிரமிக்க வைக்கிறது.

மகளுக்கு புரியாது
என் வாழ்நாளில் பார்த்த சிறந்த போட்டி என்றால் இது தான். நான் நடனமாடி உற்சாகமாக அங்கேயும், இங்கேயும் குதித்து கொண்டு இருந்ததை நமது சிறிய மகள் ஏன் என்று புரியாமல் பார்த்து கொண்டிருக்கிறார். ஒரு நாள் அவள் பெரியவளான பிறகு அவருக்கு நமது தந்தை சிறந்த இன்னிங்ஸ் ஒன்று ஆடியிருக்கிறார் என்று தெரியும்.

பெருமைப்படுகிறேன்
அப்போது நம் மகள், நமது தாய் அப்போது என் குதித்து கொண்டாடினார் என்று தெரியும். வாழ்க்கையின் மிகவும் கடினமான நாட்களை வெற்றிக்கரமாக கடந்து வந்திருக்கிறாய். முன்பை விட சிறந்தவனாகவும், பலமானாகவும் வெளிவந்து இருக்கிறாய். உன்னை நினைத்து நான் பெருமைப் படுகிறேன். உன்னுடைய பலம் மற்றவர்களுக்கும் பரவட்டும்.

அளவற்றது காதல்
உன் மீதான என்னுடைய காதல் அளவற்றது. அதற்கு முடிவே கிடையாது. எந்த சூழலிலும் அது மாறாது என்று தெரிவித்துள்ளார். இதனிடையே போட்டி முடிந்ததும் தன் மனைவியிடன் பேசியதாக விராட் கோலி கூறினார். அப்போது அனுஷ்கா மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக குறிப்பிட்ட கோலி,மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இரப்பதாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications