ஜமைக்கா விருந்து, இந்திய அணி குரூப் போட்டோ..! கடைசி நொடியில் எஸ்ஸான கோலி மனைவி..! என்ன நடந்தது?
கிங்ஸ்டன்: ஜமைக்காவில் இந்திய அணி வீரர்களுடன் குரூப் போட்டோ எடுக்கும் போது, அந்த இடத்தில் இருந்து கோலியின் மனைவி அனுஷ்கா எஸ்கேப்பான விஷயம் தான் இப்போதைக்கு கிரிக்கெட் உலகில் டாப் பேச்சாக இருக்கிறது.
இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே ஒருநாள், டி 20 தொடரில் கலக்கியிருக்கிறது. எனவே,டெஸ்ட் தொடரிலும் இந்தியா அசத்தும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி முடிந்து ஜமைக்கா சென்ற இந்திய அணி ஜமைக்காவில் உள்ள இந்திய உயர் கமிஷனர் செல்வநாயக் இருப்பிடத்திற்கு விருந்துக்காக சென்றனர். விருந்தில் இந்திய வீரர்களுடன், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் கலந்து கொண்டார்.

அனுஷ்கா எஸ்கேப்
அவர் வீரர்களுடன் ஜாலியாக பேசினார். விருந்திலும் முழுவதுமாக கலந்து கொண்டார். ஆனால், அவர் ஒரேயொரு விஷயத்தில் இருந்து மட்டும் எஸ்கேப்பாகி விட்டார். அவர் இந்திய அணி வீரர்களின் ஒட்டுமொத்த குரூப் போட்டோவில் அனுஷ்கா இடம்பெறவில்லை.
லண்டன் போட்டோ
ஏன் என்று அனைவரும் குழம்பி தள்ளினர். இப்போது தான் அதற்கான காரணம் வெளியில் வந்திருக்கிறது. அதாவது இதே போன்று 2018ம் ஆண்டு இந்திய அணி லண்டன் சென்றது. அப்போது பயணத்தின் போது அங்கு எடுத்துக்கொண்ட போட்டோவில் அனுஷ்கா சர்மா இந்திய அணி வீரர்களுடன் இருந்தார். அது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தவிர்த்த அனுஷ்கா
வீரர்கள் இருக்கும் போது, அந்த இடத்தில் அனுஷ்காவுக்கு மட்டும் என்ன அப்படி ஒரு முக்கியத்துவம் என் கேள்விகள் எழுந்தன. அது பின்னர் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. அதனால் இம்முறை அதுபோன்ற பிரச்சனை நிகழக்கூடாது என்று தவிர்த்து இருக்கிறார்.
டுவிட்டர் போட்டோ
ஆகையால், அவர் குரூப் போட்டோவில் நிற்காமல் இருந்து விட்டார். இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகமும் அனுஷ்கா சர்மா அந்த விருந்தில் கலந்து கொண்டதை தெரிவிக்காமல் இந்திய அணி வீரர்கள் மட்டும் இருக்கும் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications