அப்படிப் போடு சபாசு.... அனுஷ்கா சர்மா நடன நிகழ்ச்சியுடன் ஐபிஎல் தொடக்க விழா!!
கொல்கத்தா: வரும் ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் நடிகை அனுஷ்கா சர்மாவின் நடன நிகழ்ச்சி இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய உலகக் கோப்பைப் போட்டி நாளையுடன் முடிவடைகிறது.

இந்திய ரசிகர்களுக்கு உலகக் கோப்பை ஆர்வம் போய், ஐபிஎல் ஜூரம் ஆரம்பமாகிவிட்டது.
ஏப்ரல் மாதம்-8 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 24 தேதி வரை ஐபிஎல் நடக்கிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சியில் நடிகை அனுஷ்காவின் நடன நிகழ்ச்சி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. அதுவும் பெங்களூர் அணி கேப்டனும் அனுஷ்காவின் காதலருமான விராட் கோஹ்லி முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறதாம்.
உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தின் போது கோஹ்லி ஒரு ரன்னில் அவுட் ஆனதும். இந்தியா தோல்வி அடைந்ததையும் வைத்து ரசிகர்கள் அனுஷ்கா சர்மா குறித்து கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடங்க நிகழ்ச்சியில் அனுஷ்கா சர்மா நடனம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.


Click it and Unblock the Notifications