Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்லா புரிஞ்சுக்கோங்க.. கோலியால மட்டும் கோப்பை ஜெயிக்க முடியாது..! நீங்களும் ஒழுங்கா விளையாடணும்

மும்பை:உலக கோப்பை தொடரில், கோலி மட்டும் விளையாடினால் போதாது.. மற்ற வீரர்களும் விளையாட வேண்டும் என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் அறிவுறுத்தி உள்ளார்.

ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. கிட்டத்தட்ட உலக கிரிக்கெட் ரசிகர்களே அதற்கு தயாராகி விட்டனர். அனைவரின் பார்வையும் இங்கிலாந்தை நோக்கி திரும்பி இருக்கின்றன.

உலக கோப்பை இந்த 4 அணிகளுக்கு தான் என்று ஆளாளுக்கு கணிப்புகளை கூறி வருகின்றனர் முன்னாள் ஜாம்பவான்கள். கணிப்புகள் எப்படி இருந்தாலும் சரி... திறமையாக உத்வேகத்துடன் செயல்பட்டால் கோப்பையை யார் வேண்டுமானாலும் கைப்பற்றலாம்.

தனி நபர்

தனி நபர்

இந்நிலையில், கோலி என்ற தனி நபராக ஒரு போதும் உலக கோப்பையை வெல்ல முடியாது, மற்ற வீரர்களும் தங்கள் ஆட்டங்களை மேம்படுத்த வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது:

பேட்டிங் வரிசை எப்படி?

பேட்டிங் வரிசை எப்படி?

என் கணிப்புப்படி, தோனி 5ம் நிலை வீரராக களமிறங்கவேண்டும். ரோகித் சர்மா, தவான், கோலி, 4ம் நிலை வீரர், அதன் பிறகு தோனி என்றுதான் பேட்டிங் வரிசை இருக்கவேண்டும். பிறகு பாண்டியா களமிறங்கலாம்.

4 அணிகள்

4 அணிகள்

அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் நிச்சயமாக நுழையும். 4வது அணியாக நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளில் ஒன்று இருக்கலாம். கோலி பிரமாதமான இன்னிங்ஸ்களினால் பல போட்டிகளை இந்திய அணிக்காக வென்று கொடுத்திருக்கலாம்.

தனிநபரால் முடியாது

தனிநபரால் முடியாது

ஆனால் உலக கோப்பை தொடரில் அவர் ஒரு தனிநபராக ஒரு போதும் உலக கோப்பையை வெல்ல முடியாது. அவருடன் மற்ற வீரர்களும் தங்கள் ஆட்டங்களை மேம்படுத்த வேண்டும்.

2 வீரர்கள் ஆட வேண்டும்

2 வீரர்கள் ஆட வேண்டும்

ஒவ்வொரு போட்டியிலும் 2 வீரர்கள் தங்கள் ஆட்டத்தை வேறு தளத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அணியினர் உதவியின்றி நீங்கள் அதிகம் எதுவும் செய்து விட முடியாது. கோலி என்ற தனிநபரால் ஒரு தொடரையே வெல்ல முடியாது.

ஏமாற்றமே மிஞ்சும்

ஏமாற்றமே மிஞ்சும்

ஒவ்வொரு முக்கியக் கட்டத்திலும் பிற வீரர்களும் பங்களிப்பு செய்வது அவசியம். இது நடக்க வில்லையெனில் நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும். நமது வீரர்கள் போதிய கிரிக்கெட் அனுபவம் உள்ளவர்கள். ஆனால், சூழ்நிலை குறித்த விழிப்புணர்வு மிக முக்கியம் என்றார்.

Story first published: Friday, May 24, 2019, 13:18 [IST]
Other articles published on May 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+