Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி, ரெய்னாவுக்கு பாடல்களை டெடிகேட் செஞ்ச ஆஸ்கார் நாயகன்... மிகச்சிறப்பு!

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 8வது போட்டியில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.

தன்னுடைய முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதி சிஎஸ்கே தோல்வி கண்டது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி கொள்ள தீவிரம் காட்டி வருகிறது.

இதனிடையே ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் தோனி மற்றும் ரெய்னாவிற்கு சிறப்பான டெடிகேஷனை செய்துள்ளார்

சிஎஸ்கேவின் தீவிரம்

சிஎஸ்கேவின் தீவிரம்

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. கடந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி கொள்ள தீவிரம் காட்டி வருகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சிஎஸ்கே ரசிகர்களும் இன்றைய போட்டியில் அந்த அணி வெற்றி கொள்ள வேண்டும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். கடந்த சீசனில் ப்ளே-ஆப் சுற்றிற்குகூட முன்னேறாமல் சிஎஸ்கே வெளியேறிய நிலையில் தற்போது அந்த அணி 4வது கோப்பையை வெற்றி கொள்ள வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பு

பஞ்சாப் அணியின் சிறப்பான வெற்றி

பஞ்சாப் அணியின் சிறப்பான வெற்றி

இந்நிலையில் இன்றைய போட்டியில் மோதவுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, கடந்த தனது முதல் போட்டியில் சிறப்பாக வெற்றி கொண்டு இன்றைய போட்டியில் சிஎஸ்கேவுடன் மோதவுள்ளது. இந்நிலையில் முதல்போட்டியில் தோல்வியடைந்துள்ள சிஎஸ்கே இன்றைய போட்டியில் வெற்றி பெறும் கட்டாயத்தில் உள்ளது.

டெடிகேட் செய்த இசைப்புயல்

டெடிகேட் செய்த இசைப்புயல்

இதனிடையே, இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அந்த அணியின் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவிற்கு ஸ்பெஷலாக பாடல்களை டெடிகேட் செய்துள்ளார். கிரிக்கெட் லைவ் நிகழ்ச்சியில் பேசிய அவர் லகான் படத்தில் உத்வேகமான 'சலே சலோ' பாடலை தோனிக்காக டெடிகேட் செய்வதாக தெரிவித்துள்ளார்.

ரெய்னாவிற்கு பாடல் டெடிகேஷன்

ரெய்னாவிற்கு பாடல் டெடிகேஷன்

இதேபோல சுரேஷ் ரெய்னாவிற்கு ரங்கீலா படத்தின் மங்க்த்தா ஹை க்யா பாடலை டெடிகேட் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். தான் பெங்களூரு செல்லும் போதெல்லாம் அந்த மக்கள் இந்த பாடலை விரும்பி கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, April 16, 2021, 20:10 [IST]
Other articles published on Apr 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+