Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்பாவை போல் மகன்.. சச்சினை அப்படியே பின்பற்றிய அர்ஜுன் டெண்டுல்கர்.. வயது வித்தியாசத்தை பாருங்க!

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திலும் கூட தனது தந்தையை பின்பற்றி இருப்பது ரசிகர்களிடையே கவனத்தை திருப்பி இருக்கிறது. அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா சந்தோஷ் இடையிலான வயது வித்தியாசம் மீண்டும் சோசியல் மீடியாவில் பேசுபொருளாகி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு 4 நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் மகளான சானியா சந்தோக் மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் இருவரும் நீண்ட நாட்களாக நட்புடன் பழகி வந்த நிலையில், அதன்பின் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

Arjun Tendulkar s Marriage with Sania Chandhok Sparks Social Media Buzz over Age Gap

இந்த விவகாரம் தொடர்பாக அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் இருவரும் தங்களின் குடும்பத்தினரிடம் கூறிய பின், இரு தரப்பினரும் நேரில் சந்தித்து ஆலோசித்து நிச்சயதார்த்தம் நடத்த முடிவு எடுத்துள்ளனர். அதன்படி ஆகஸ்ட் 13ஆம் தேதி இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கரின் நெருங்கிய தோழி சானியா சந்தோக். இது தெரிய வந்த நிலையில், பலரும் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் இடையிலான வயது வித்தியாசம் தெரிய வந்திருக்கிறது. அர்ஜுன் டெண்டுல்கர் 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி பிறந்திருக்கிறார்.

அதேபோல் சானியா சந்தோக் 1998ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி பிறந்திருக்கிறார். இதன் மூலமாக அர்ஜுன் டெண்டுல்கரை விடவும் சானியா சந்தோக் ஒரு ஆண்டு மூத்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் சச்சின் டெண்டுல்கரை திருமணத்திலும் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பின்பற்றி இருப்பதாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அஞ்சலி தம்பதிகளுக்கு இடையிலான வயது வித்தியாசம் 5 ஆகும். இந்தியாவில் மூத்தப் பெண்ணை திருமணம் செய்யும் பல்வேறு நபர்களுக்கும், சச்சின் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைந்தார். தற்போது தந்தையைப் போல் மகனும் சீனியர் பெண்ணை திருமணம் செய்வது ரசிகர்களின் கவனத்தை பெற்று இருக்கிறது.

Story first published: Sunday, August 17, 2025, 15:23 [IST]
Other articles published on Aug 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+