மீண்டும் மும்பை அணிக்கு சர்ப்ரைஸ்..! செலக்ட் ஆன ஜாம்பவானின் மகன்…! அப்போ கலக்கல் காத்திருக்கு..!
Recommended Video
மும்பை: பாபுனா கோப்பைக்கான மும்பை அணியில் ஜாம்பவான் சச்சின் மகன் அர்ஜூன் தேர்வாகி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சினை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அவரது சாதனைகளை எழுத இடமே இருக்காது. அவரது செல்ல மகன் அர்ஜூன். எப்படியாவது தமது அணியை தம்மை போல உருவாக்கி விட வேண்டும் என்பது சச்சின் அவா.
தொடக்கத்தில் அது நடக்குமா என்று பார்க்கப்பட்டது. காரணம், மகன் அர்ஜூன் கிரிக்கெட் மீது ஆர்வமில்லாமல் இருந்தது. ஆனால் தற்போது நிலைமையோ வேறு. முழு கிரிக்கெட் வீரராக கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருகிறார். அப்பா சச்சின் போல பேட்டிங்கில் கலக்காமல், அர்ஜூன் பவுலிங்கில் வேகப்பந்து வீச்சாளராக கலக்கி வருகிறார்.

பாபுனா கிரிக்கெட் தொடர்
இந்நிலையில் செப்டம்பர் 5 முதல் உள்ளூர் தொடரான பாபுனா கோப்பை தொடர் தொடங்குகிறது. அதில் பங்கேற்கும் அணியை மும்பை கிரிக்கெட் சங்கம் தேர்வு செய்து அறிவித்து இருக்கிறது. பாபுனா கோப்பை தொடரை விதர்பா கிரிக்கெட் சங்கம் நடத்துகிறது.

50 ஓவர் போட்டி
இந்த ஆண்டு பாபுனா தொடர் 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக நடத்தப்படுகிறது. அதற்கான அணியில் ஜாம்பவான் சச்சின் மகன் அர்ஜூன் பெயரும் இடம் பெற்றுள்ளது. முன்னதாக நடந்த டி 20 மும்பை லீக் தொடரில் ரூ. 5 லட்சத்துக்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டார்.

தேர்வானார் அர்ஜூன்
தற்போது பாபுனா கோப்பை தொடருக்கான அணியிலும் அர்ஜுன் தேர்வு செய்யப் பட்டுள்ளார். 19 வயதான அர்ஜூன் இந்திய கிரிக்கெட் அணிக்காக வலைப்பயிற்சி பவுலராக இருக்கிறார். பாபுனா கோப்பைக்கான அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வீரர்கள் விவரம்
அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஆதித்யா தாரே, ஜெய் பிஸ்தா, சர்ப்ராஜ் கான், சுபம் ரஞ்சன், ராவ்னாக் சர்மா, ஏக்நாத் கெர்கார், சூபியான் சாயிக், ஆகாஸ் பார்கர், சாம்ஸ் முலானி, ஆதித்யா துமால், ஷாஸ்னாக் அடார்டே, அக்யூப் குரேசி, குர்திக் ஹனாக்வாதே, அர்ஜூன் டெண்டுல்கர்.


Click it and Unblock the Notifications