Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2021 ஏலப்பட்டியல்... அர்ஜூன் டெண்டுல்கர் தேர்வு... ஆதாரவிலை 20 லட்சம் ரூபாயாம்!

சென்னை : வரும் 18ம் தேதி சென்னையில் ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம் சிறிய அளவில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்கவுள்ள வீரர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 1114 வீரர்கள் இதற்கு பதிவு செய்திருந்த நிலையில் 292 வீரர்கள் இதற்காக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவரது ஆதார விலையாக 20 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

292 வீரர்கள் தேர்ந்தெடுப்பு

292 வீரர்கள் தேர்ந்தெடுப்பு

ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கென வரும் 18ம் தேதி சென்னையில் சிறிய அளவில் ஏலம் நடைபெறவுள்ளது. இதற்கென 1114 வீரர்கள் தங்களை பதிவு செய்திருந்த நிலையில் தற்போது 292 வீரர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜூன் டெண்டுல்கர் தேர்வு

அர்ஜூன் டெண்டுல்கர் தேர்வு

இந்நிலையில் முன்னாள் வீரர் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். கடந்த சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக தன்னுடைய அறிமுக போட்டியில் விளையாடிய அர்ஜூன், இரண்டு போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.

அர்ஜூன் ஆதார விலை ரூ.20 லட்சம்

அர்ஜூன் ஆதார விலை ரூ.20 லட்சம்

இதையடுத்து வரும் 20ம் தேதி நடைபெறவுள்ள விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் இவர் இடம்பெறவில்லை. இதையடுத்து ஐபிஎல் ஏலத்தில் இவரை ஏலத்தில் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அர்ஜூனின் ஆதார விலை 20 லட்சம் ரூபாயாக உள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அதிக தொகை

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அதிக தொகை

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க 292 வீரர்கள் தேர்வாகியுள்ள நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 53.20 கோடி ரூபாயை தன்னிடம் வைத்துள்ளது. ஆனால் குறைந்தபட்சமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் குறைந்தபட்சமாக 10.75 கோடி ரூபாயை தன்னிடம் வைத்துள்ளன.

Story first published: Friday, February 12, 2021, 13:24 [IST]
Other articles published on Feb 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+