Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குழந்தைகால கனவு.. நெகிழ்ந்த அர்ஜூன் டெண்டுல்கர்.. மும்பை இந்தியன்சுக்கு நன்றி!

சென்னை : மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நேற்றைய ஏலத்தில் அர்ஜூன் டெண்டுல்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

20 லட்சம் ரூபாய் ஆதார விலைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ள நிலையில் அதற்கு அர்ஜூன் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது தனது குழந்தைகால கனவு என்றும் கூறியுள்ளார்.

அர்ஜூன் டெண்டுல்கர் ஏலம்

அர்ஜூன் டெண்டுல்கர் ஏலம்

ஐபிஎல் ஏலம் 2021 நேற்றைய தினம் சென்னையில் சிறிய அளவில் நடைபெற்ற நிலையில், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை எந்த அணி ஏலத்தில் எடுத்தது என்பதை அறிந்து கொள்ள நெட்டிசன்கள் அதிக ஆர்வம் காட்டினர். துவக்கத்தில் அவர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.

அர்ஜூன் அதிரடி

அர்ஜூன் அதிரடி

இந்த ஏலத்திற்கு முன்னதாக மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் மும்பையில் நடைபெற்ற தொடரில் 31 பந்துகளில் 71 ரன்களையும் 41 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி கவனம் பெற்றார் அர்ஜூன் டெண்டுல்கர். இந்த 71 ரன்களில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸ்களும் அடக்கம்.

ரூ.20 லட்சத்திற்கு ஏலம்

ரூ.20 லட்சத்திற்கு ஏலம்

அவரை எந்த அணி எவ்வளவு ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கும் என்ற ஆர்வம் அனைவரிடமும் காணப்பட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி அவரது ஆதார விலையான 20 லட்சம் ரூபாய்க்கு அவரை இறுதியாக ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் இதுகுறித்து அர்ஜூன் டெண்டுல்கர் வீடியோ மூலம் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அர்ஜூன் நெகிழ்ச்சி

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவது தனது குழந்தைகால கனவு என்றும் குழந்தை பருவத்தில் இருந்து தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக கடுமையான ரசிகன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் தன்மீது நம்பிக்கை வைத்து தன்னை ஏலத்தில் எடுத்த கோச்கள், உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, February 19, 2021, 10:40 [IST]
Other articles published on Feb 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+