முதல் டி20ல் இந்திய அணி பேட்டிங்.. ப்ளேயிங் 11ல் இளம் வீரர் அறிமுகம்.. ரோகித் போட்ட பக்கா ப்ளான்!
சவுத்தாம்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்காக அர்ஷ்தீப் சிங் அறிமுகமாகியுள்ளார்.
இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி சவுத்தாம்டன் நகரத்தில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ப்ளேயிங் 11
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி டி20 தொடரில் கம்பேக் கொடுக்க வேண்டும் என முணைப்புடன் உள்ளது. இதற்காக மிகவும் பலமான ப்ளேயிங் 11 உடன் ரோகித் சர்மா களமிறங்கியுள்ளார். ஓப்பனிங்கை பொறுத்தவரையில் ரோகித் சர்மா - இஷான் கிஷான் ஜோடி வழக்கம் போல களமிறங்கவுள்ளனர்.

மிடில் வரிசை
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடாவுக்கு 3வது வீரராக வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்களை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கிற்கு பக்க பலமாய் இருக்கிறார்கள். பந்துவீச்சை பொறுத்தவரையிலும் நல்ல படையை உருவாக்கியுள்ளனர்.

அறிமுக வீரர்
ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் முதல் முறையாக இந்திய அணிக்கு அறிமுகமாகியுள்ளார். இவருக்கு உறுதுணையாக ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர் குமார் ஆகியோர் உள்ளனர். 4வது வேகப்பந்துவீச்சாளர் தேவைப்பட்டால் ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார். சுழற்பந்துவீச்சாளர்களாக அக்ஷர் பட்டேல், யுவேந்திர சாஹல் விளையாடுகின்றனர்.

ப்ளேயிங் 11 விவரம்
ரோகித் சர்மா, இஷான் கிஷான், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், யுவேந்திர சாஹல்


Click it and Unblock the Notifications