செம வாய்ப்பு.. இதை மட்டும் தோனி பண்ணிட்டா சிறப்பா இருக்கும்.. வைரல் வீடியோவால் எழுந்த கோரிக்கை!
ராஞ்சி: டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு தோனி குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் 3 விவசாயிகள் சட்டம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (பதவி உயர்வு மற்றும் வசதி) சட்டம், 2020, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த சட்டம், 2020, அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) சட்டம் , 2020 ஆகிய சட்டங்கள் பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்தித்து உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த வருடம் நவம்பர் 26ம் தேதியில் மாபெரும் விவசாய போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டம்
6 மாதங்களுக்கும் அதிகமாக போராட்டம் செய்யும் வகையில் திட்டமிட்டு விவசாயிகள் களமிறங்கி உள்ளனர். இந்த போராட்டத்தில் பஞ்சாப், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் பங்கேற்று உள்ளது. தென்னிந்தியாவிலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக ஆங்காங்கே விவசாயிகள் ஆதரவு தெரிவித்து ஆதரவு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

நாளை
இந்த நிலையில் நாளை போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் விவசாயிகள் எல்லோரும் டெல்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு டிராக்டர் பேரணியை நடத்த உள்ளனர். விவசாய போராட்டத்தின் ஒரு அங்கமாக மிகப்பெரிய அளவில் இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்காக டெல்லி எல்லையில் அதிக அளவில் டிராக்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

எப்படி
இந்த நிலையில் விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு கிரிக்கெட் வீரர் தோனி ஆதரவு தெரிவிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. கிரிக்கெட் வீரர் தோனி தற்போது தீவிரமாக விவசாய பணிகளை செய்து வருகிறார். தனது பண்ணை வீட்டில் தானே டிராக்டர் மூலம் உழுது விவசாய பணிகளை செய்து வருகிறார். இவரின் பண்ணையில் விளைவிக்கப்படும் பொருட்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கூட ஏற்றுமதி ஆகி வருகிறது.

கோரிக்கை
இந்த நிலையில் விவசாய போராட்டத்திற்கு தோனி ஆதரவு தெரிவிப்பாரா என்று பலரும் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். தோனி விவசாயம் செய்கிறார். அவருக்குத்தான் விவசாயிகளின் கஷ்டம் தெரியும். அவர் எங்களுக்காக குரல் கொடுத்தால் அது எங்கள் போராட்டத்திற்கு பெரிய பலத்தை கொடுக்கும்.

அரசியல்
அரசியல் மீது தோனி இதுவரை ஈடுபாடு காட்டியது இல்லை. ஆனால் மக்களுக்காக அவர் குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும். அவரின் ஜார்கண்ட் மாநிலத்திலேயே விவசாயிகள் பலர் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

வீடியோ
அவர்களுக்காக தோனி கண்டிப்பாக குரல் கொடுக்க வேண்டும் என்று இணையத்தில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. தனது வயலில் தோனி விவசாயம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை அடுத்தே தோனியிடம் விவசாயிகள் சிலர் இந்த கோரிக்கையை வைக்க தொடங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications