மகனைச் சுத்திச் சுத்தி வந்து.. முடி வெட்டி அசத்திய சச்சின்.. மகளுக்கும் தேங்க்ஸ்!
மும்பை : கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கற நிலையில், கிரிக்கெட் வீரர்களோட பல திறமைகள் தன்னோட முகத்தை காட்டிக்கிட்டு இருக்கு.
Recommended Video
கொரோனா காரணமாக சலூன் கடைகள் மூடியிருக்கற நிலையில், கிரிக்கெட் வீரர்கள் வீட்டுல இருக்கறவங்களோட உதவியால அழகா மாறிக்கிட்டு இருக்காங்க.
முதல்ல இதை ஆரம்பிச்சி வச்சவர் விராட் கோலி தான். அவரோட மனைவி அனுஷ்கா அவருக்கு முடிவெட்டி விட்டாங்க. அப்புறமா, சச்சின் தனக்கு தானே முடிவெட்டிக்கிட்டாரு. இப்போ ஒருபடி மேல போய் தன்னோட பையனுக்கும் முடி வெட்டி விட்டுருக்காரு.

மூடப்பட்ட சலூன் கடைகள்
கொரோனா வைரஸ் காரணமாக 4வது கட்டமாக நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் சலூன் கடைகள் திறக்கப்படாததால், பலர் ஆதிகாலத்து மனிதர்களாக வலம்வந்துக் கொண்டிருக்கிறார்கள். சலூன் கடைகள் திறக்கப்பட்டால், மட்டுமே அவர்களை காப்பாற்ற முடியும். இதில் சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் தங்களது வீட்டினர் கைகளால் முடிவெட்டிக் கொள்கிறார்கள்.

தொடரும் கிரிக்கெட் வீரர்கள்
இந்த முடிவெட்டும் வைபவத்தை முதலில் துவக்கி வைத்தவர் விராட் கோலிதான். தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மா கைகளால் அவர் முடிவெட்டிக் கொண்டார். பார்க்க அழகாகவே இருந்தது அந்த ஸ்டைல். இதையடுத்து முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், யாருடைய உதவியும் இல்லாமல் தனக்கு தானே முடிவெட்டிக் கொண்டார். தொடர்ந்து சத்தீஸ்வர் புஜாராவும் தன்னுடைய மனைவி கைகளால் முடிவெட்டிக் கொண்டார்.

அழகாக மாறிய அர்ஜூன்
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு தற்போது முடி வெட்டி விட்டுள்ளார். அர்ஜூனுக்கு சுற்றி சுற்றி வந்து அவர் முடிவெட்டிய அழகு மிகவும் தேர்ந்தெடுத்த ஹேர் டிரஸ்ஸரைப் போல நினைவுப்படுத்தியது. அவருடைய கைவண்ணத்தில் அர்ஜன் மிகவும் அழகாக மாறியிருந்தார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் சச்சின் பகிர்ந்துள்ளார்.

மகனுக்கு அனைத்தையும் செய்ய வேண்டும்
இந்த வீடியோவை அடுத்து அவர் போட்டுள்ள கேப்ஷனும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு தந்தையாக நம்முடைய மகனுக்கு அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். கூட சேர்ந்து விளையாட வேண்டும், ஜிம்மில் நேரத்தை செலவிட வேண்டும், முடியையும் வெட்டிவிட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் சலூன் உதவியாளராக செயல்பட்ட தன்னுடைய மகள் சராவிற்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications