Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Asia Cup: ஜடேஜா, ஹர்திக் உடன் பயிற்சி.. இஷான் கிஷனை தயார் செய்யும் இந்திய அணி.. அப்போ சஞ்சு சாம்சன்?

பெங்களூரு: ஆசியக் கோப்பையின் குரூப் சுற்று போட்டிகளில் இந்திய விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் விளையாட வாய்ப்பில்லாததால், அந்த இடத்தில் இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் இருவரில் யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று பாகிஸ்தானில் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி செப்.2ஆம் தேதி தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதற்காக இன்று இந்திய அணி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. பெங்களூரில் இருந்து நேராக இலங்கை செல்லும் இந்திய வீரர்கள், அடுத்தடுத்து பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

As Per Sources Ishan Kishan practiced with Jadeja and Hardik in the Alur Camp ahead of the Asia Cup 2023

இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடரின் முதல் இரு போட்டிகளில் கேஎல் ராகுல் பங்கேற்க மாட்டார் என்றும், அவர் என்சிஏவின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். என்னதான் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் பயிற்சியில் கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டாலும், உலகக்கோப்பை நெருங்குவதால் இந்திய அணி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு எதிரான குரூப் போட்டியில் கேஎல் ராகுல் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாக தெரிய வந்துள்ளது. இதனால் கேஎல் ராகுல் இடத்தில் எந்த இந்திய வீரர் களமிறக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இந்திய ஒருநாள் அணியில் விளையாடி வருபவர்.

இதனால் அவருக்கான மாற்று வீரராக உள்ள சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தான். அதேபோல் மற்றொரு விக்கெட் கீப்பரான இஷான் கிஷனும் அவரது இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் இஷான் கிஷன் இதுவரை இந்திய அணிக்காக மிடில் ஆர்டரில் விளையாடியதில்லை.

தொடக்க வீரராக மட்டுமே இஷான் கிஷன் களமிறங்கியுள்ளார். இதனால் இஷான் கிஷனுக்காக இந்திய அணியின் பேட்டிங் வரிசையை ரோகித் சர்மா மாற்றுவாரா அல்லது நேர் மாற்று வீரராக உள்ள சஞ்சு சாம்சன் களமிறக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இஷான் கிஷனை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் வகையில் மிடில் ஆர்டர் வீரராக இந்திய அணி பயன்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஆலூர் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் இஷான் கிஷன் கீழ் வரிசை பேட்ஸ்மேன்களான ஹர்திக் மற்றும் ஜடேஜா ஆகியோருடனே பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் குரூப் போட்டியில் இஷான் கிஷன் மிடில் ஆர்டரிலேயே விளையாடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, August 30, 2023, 8:39 [IST]
Other articles published on Aug 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+