Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ashes: “வாசிம் அக்ரம் என்னைவிட சிறந்த பவுலர்.. நான் அவர்..” ஸ்டார்க் பேச்சால் நெகிழ்ந்த ரசிகர்கள்

பிரிஸ்பேன்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்ற பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரமின் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் முறியடித்துள்ளார். இருப்பினும், சாதனை படைத்த கையோடு அவர் பேசிய வார்த்தைகள் கிரிக்கெட் உலகை நெகிழ வைத்துள்ளது. "நான் வாசிம் அக்ரமுக்கு அருகில் கூட நிற்க முடியாது" என்று அவர் தனது அடக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஆஷஸ் பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இங்கிலாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்டார்க் தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார்.

Ashes 2025 Mitchell Starc s Humble Reaction after Breaking Wasim Akram s Left-Arm Pacer World Record

இந்த 6 விக்கெட்டுகளுடன் சேர்த்து, மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 418 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம், 414 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த வாசிம் அக்ரமின் சாதனையை முறியடித்து, டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஹாரி ப்ரூக் விக்கெட்டை வீழ்த்தியபோது, அவர் அக்ரமின் 414 விக்கெட் சாதனையைத் தாண்டினார். இந்த இமாலய சாதனையை முறியடித்தது குறித்து நிருபர்கள் கேட்டபோது, ஸ்டார்க் மிகவும் பணிவாகப் பதிலளித்தார்.

"என்னை விட வாசிம் அக்ரம் எவ்வளவோ சிறந்த பந்துவீச்சாளர். என்னைப் பொறுத்தவரை, இடதுகை பந்துவீச்சாளர்களின் சிகரம் அவர்தான். கிரிக்கெட் விளையாடிய மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் அவரும் ஒருவர். அவருடைய பெயருடன் என் பெயரும் பேசப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அவருடன் என்னை ஒப்பிட முடியாது. நான் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிக்கிறேன், அவ்வளவுதான்" என்று பெருந்தன்மையுடன் கூறினார் ஸ்டார்க்.

ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களான பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக நீக்கப்பட்டனர். அனுபவ சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோன் இந்த போட்டியில் விளையாடவில்லை. இவர்கள் யாரும் இல்லாத நிலையில், பந்துவீச்சுப் படையை முன்னின்று வழிநடத்திய ஸ்டார்க், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார்.

ஹர்பஜனை முந்தினார்.. அடுத்த குறி ஹெராத்!

தற்போது 418 விக்கெட்டுகளுடன் இருக்கும் ஸ்டார்க், அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கையும் (417) பின்னுக்குத் தள்ளி 15-வது இடத்தைப் பிடித்துள்ளார். அடுத்து ஷான் பொல்லாக் (421) மற்றும் ரிச்சர்ட் ஹாட்லி (431) ஆகியோரை முந்த வாய்ப்புள்ளது.

மேலும், 16 விக்கெட்டுகளை வீழ்த்தினால், இலங்கையின் ரங்கன ஹெராத் (433) சாதனையை முறியடித்து, ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர் என்ற வரலாற்றையும் அவர் படைப்பார்.

Story first published: Thursday, December 4, 2025, 20:14 [IST]
Other articles published on Dec 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+