மேக்ஸ்வெல் எல்லாம் ஒன்னும் இல்ல..இந்த ப்ளேயர் தான் இந்தாண்டின் ஹீரோ.. நெஹ்ரா கணிப்பு
சென்னை: ஐபிஎல் 14வது சீசனில் அதிக மதிப்புமிக்க வீரராக இருக்கப்போகிறவர் குறித்த அஷிஷ் நெஹ்ராவின் கருத்து மற்ற வீரர்களின் கணிப்பை விட முற்றிலும் வேறுப்பட்டுள்ளது.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எடுப்பதற்கு அணிகள் தயாராகி வருகின்றன.
இந்த தொடரில் அதிக விலைக்கு செல்லக்கூடிய வீரராக மேக்ஸ்வெல் இருப்பார் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அஷிஷ் நெஹ்ரா அதற்கு முற்றிலும் மாற்றாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்
ஐ.பில். தொடர் 14வது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலம் வரும் பிப்.18ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1,114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் 292 வீரர்கள் ஏலத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக அணிகள் தயாராகி வருகின்றன.

வெளிநாட்டு வீரர்கள்
ஐபிஎல் தொடரில் அதிகளவில் இந்திய வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் வெளிநாட்டு வீரர்களின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகவே உள்ளது. குறிப்பாக அணியின் கேப்டன்களாகவும் அவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேக்ஸ்வெல்
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் மற்றும் கிறிஸ் மோரிஸ் அதிக மதிப்பு மிக்க ப்ளேயராக இருப்பார்கள் என பிரபலங்கள் தெரிவித்துள்ளனர். கடைசி 2 சீசன்களில் மேக்ஸ்வெல் 108 மற்றும் 189 ஆகியவையே மொத்தமாக எடுத்திருந்தார். இருந்த போதும் அவர் மதிப்பு மிக்க வீரர் ஆவார் என பார்க்கப்படுகிறது.

நெஹ்ராவின் கணிப்பு
அனைவரும் மேக்ஸ்வெல் பக்கம் திரும்பிய நிலையில் முன்னாள் வீரர் அஷிஷ் நெஹ்ரா சகிப் அல் ஹசன் தான் இந்தாண்டின் முக்கிய வீரராக இருப்பார் என தெரிவித்துள்ளார். அவர் எந்த அணிக்கு சென்றாலும் பொறுத்தமாக இருப்பார் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications