Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கம்பீர் என்ன வெளிநாட்டு பயிற்சியாளரா? பெரிய தப்பு பண்ணிட்டாரு.. ஆஷிஸ் நெஹ்ரா கருத்து

மும்பை : இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வின்றி பயன்படுத்தப்பட்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆசிஷ் நெஹ்ரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒருநாள் தொடரில் கம்பீர் முதல் முறையாக இந்திய அணிக்கு பயிற்சியாளராக தலைமையேற்றார்.

இந்த சூழலில் ரோகித் சர்மா, விராட் கோலி இந்த தொடரில் விளையாடினால் தான் பழகுவதற்கு சரியாக இருக்கும் என்று அவர் கூறினார். இந்த சூழலில் இருவரும் விளையாடிய பிறகும் இந்திய அணி தோல்வியை தழுவி தொடரை இழந்தது.

cricket rohit sharma Virat kohli

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா, இந்திய அணி அடுத்து சில நாட்கள் கழித்து தான் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கிறது. இது எப்போதாவது தான் இது போன்ற ஓய்வு கிடைக்கும். எனவே கோலி, ரோஹித் சர்மா ஆகிய வீரர்களுக்கு இலங்கை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல இளம் வீரர்களை இந்திய அணி நிர்வாகம் சோதித்து பார்த்திருக்க வேண்டும். கம்பீர் ஒரு புதிய பயிற்சியாளர். அவர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று நினைத்து இருப்பார். அது தவறு இல்லை என்றாலும் இருவருமே கம்பீருக்கு நன்கு தெரிந்தவர்கள். கம்பீர் ஒன்றும் வெளிநாட்டு பயிற்சியாளர் கிடையாது.

வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தான் அனுபவ வீரர்களுடன் நல்ல உறவை மேம்படுத்துவதற்காக இதுபோன்று செய்வார்கள். இலங்கை தொடரில் நாம் புது புது வீரர்களை பயன்படுத்தி சோதித்து பார்த்திருக்க வேண்டும். இலங்கைத் தொடரில் விளையாடாமல் இருந்திருந்தால் ரோகித் சர்மாவும் விராட் கோலியும் புதிய சீசனில் விளையாடி இருப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, August 13, 2024, 20:06 [IST]
Other articles published on Aug 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+