Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் தொடரில் நூறு போட்ட நெக்ரா

ஹைதராபாத்: இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீரர்களில் ஒருவராக திகழும் ஆசிஷ் நெக்ரா ஐபிஎல்லில் ஒரு சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அவர் மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் விளையாடி இருக்கிறார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக கடந்த ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார்.

Ashish Nehra takes 100 IPL wickets

37 வயதாகும் ஆசிஷ் நெக்ரா ஓய்வு குறித்து சிந்திக்கவில்லை. இப்போதும் மிகவும் துல்லியமாக பந்துவீசி வருகிறார். பெங்களூர் அணிக்கு எதிராக அவர் நேற்று தொடர்ச்சியாக 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அந்த அணி கேப்டன் வாட்சன் மற்றும் அரவிந்த் ஆகியோர் இவ்வாறு அவுட்டாகினர்.

இதன்மூலம் ஆசிஷ் நெக்ரா ஐபிஎல் தொடரில், 100 விக்கெட்டை வீழ்த்தினார். 83 ஆட்டங்களில் மொத்தம் 300.5 ஓவர்கள் வீசி 2340 ரன் விட்டுக் கொடுத்து 100 விக்கெட்டை தொட்டுள்ளார். இவரது சராசரி 23.40 ஆகும். 10 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சாகும்.

Story first published: Thursday, April 6, 2017, 16:37 [IST]
Other articles published on Apr 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+