For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

MI vs KKR: மாபெரும் வரலாறு படைத்த அஸ்வனி குமார்.. பவுலிங் ரெக்கார்டு.. 16 ஆண்டு கால சாதனை சமன்

மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் அறிமுகமான அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் அறிமுகத்தில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் தனது அறிமுகத்தில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷதாப் ஜகாட்டி தனது முதல் ஐபிஎல் பந்துவீச்சின் போது (அவரது அறிமுகப் போட்டியில் பந்து வீசவில்லை.) 24 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதன் பின் பல வெளிநாட்டு வீரர்கள் அவரைக் காட்டிலும் தங்கள் அறிமுகத்தில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தனர்.

Ashwani Kumar s Record-Breaking Debut in MI vs KKR match Best Bowling by an Indian in IPL 2025

ஆனால், ஷதாப் ஜகாட்டிக்கு இணையாக எந்த ஒரு இந்திய பந்துவீச்சாளரும் சிறந்த அறிமுக பந்துவீச்சை பதிவு செய்யவில்லை. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் 23 வயதான வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார் தனது ஐபிஎல் அறிமுகத்தில் நான்கு ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அதை சமன் செய்து இருக்கிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான அஜிங்க்யா ரஹானே, ரிங்கு சிங், மனீஷ் பாண்டே மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகியோரது விக்கெட்டுகளை அஸ்வனி குமார் வீழ்த்தினார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக தனது அறிமுக போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பந்துவீச்சாளர்களில் நான்காவது இடத்தை பிடித்து இருக்கிறார்.

ஐபிஎல் அறிமுகப் போட்டியில் சிறந்த பந்துவீச்சு

6/12 - அல்சாரி ஜோசப் (MI) vs SRH, 2019
5/17 - ஆண்ட்ரூ டை (GL) vs RPS, 2017
4/11 - ஷோயப் அக்தர் (KKR) vs DD, 2008
4/24 - அஸ்வனி குமார் (MI) vs KKR, 2025*
4/26 - கெவோன் கூப்பர் (RR) vs KXIP, 2012
4/33 - டேவிட் வைஸ் (RCB) vs MI, 2015

ஐபிஎல் அறிமுகத்தில் சிறந்த பந்துவீச்சு (இந்திய வீரர்கள்)

4/24 - ஷதாப் ஜகாட்டி (CSK) vs DD, 2009
4/24 - அஸ்வனி குமார் (MI) vs KKR, 2025*
4/29 - பால் வால்தாட்டி (KXIP) vs டெக்கான் சார்ஜர்ஸ், 2011

செய்தி சுருக்கம்:

  • 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்காக அறிமுகமான அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  • ஐபிஎல் அறிமுகத்தில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஷதாப் ஜகாட்டியுடன் முதல் இடத்தை பகிர்ந்துள்ளார்.

  • அஸ்வனி குமார் தனது அறிமுகப் போட்டியில் 4 ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  • ஐபிஎல் அறிமுகப் போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

  • ஷதாப் ஜகாட்டி 2009ல் டெல்லிக்கு எதிராக 4/24 என்ற பந்துவீச்சை பதிவு செய்திருந்தார்.

Story first published: Monday, March 31, 2025, 22:27 [IST]
Other articles published on Mar 31, 2025
English summary
Ashwani Kumar's Record-Breaking Debut in MI vs KKR match: Best Bowling by an Indian in IPL 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+