KXIP vs MI:ஒரு ஓவரில் 7 பந்துகள் வீசிய அஸ்வின்... கண்டு கொள்ளாத நடுவர்கள்.. வெடிக்கும் சர்ச்சை
மொகாலி:ஐபிஎல் தொடரில் மொகாலியில் தொடங்கியுள்ள மும்பை அணிக்கு எதிரான போட்டியின் தொடக்க ஓவரில் அஸ்வின் 7 பந்துகள் வீசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பஞ்சாப் மொகாலி மைதானத்தில் பஞ்சாப்பும், மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை நடத்துகின்றன. போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து இளம் வீரரான வருண் சக்கரவர்த்தி நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக முருகன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான மும்பை அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித்தும், டி காக்கும் களம் இறங்கினர். முதல் ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் அஸ்வின் 6 பந்துகளை வீசிவிட்டு 7வது பந்தையும் வீசினார். அதில் டி-காக் ஒரு பவுண்டரி அடித்தார்.
ஒரு ஓவரில் எத்தனை பந்துகள் வீசப்படுகின்றன என்பதை களத்தில் இருந்த இரு அம்யர்களும் கவனிக்கவில்லை. அதே போல இரு அணி வீரர்களும்கூட கூடுதலாக ஒரு பந்து வீசப்படுவதை கவனிக்கவில்லை.
வழக்கம்போல இதை கவனித்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அம்பயர்களை தாளித்து எடுத்துவிட்டனர். சர்ச்சைகளில் சிக்கியுள்ள அஸ்வினையும் அவர்கள் விளாசி தள்ளிவிட்டனர்.


Click it and Unblock the Notifications