Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதிய சாதனையை படைக்க போகும் அஸ்வின்.. சில விக்கெட்டுகள் தான் தேவை.. முழு விவரம்

அகமதாபாத் : தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது ஒரு மிகப்பெரிய சாதனையை எதிர்நோக்கி உள்ளார்.பார்டர் கவாஸ்கர் தொடரில் களம் இறங்கிய அஸ்வின் மூன்று டெஸ்ட் போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் அஸ்வின் ஐசிசி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.எனினும் மூன்றாவது டெஸ்டில் அஸ்வின் மொத்தமாகவே நான்கு விக்கெட்டுகளை தான் வீழ்த்தினார்

அஸ்வின் 690

அஸ்வின் 690

இதனால் அஸ்வின் தரவரிசை புள்ளிகள் குறைந்தது. இதனைத் தொடர்ந்து ஆண்டர்சனுடன் அஸ்வின் தனது முதல் இடத்தை பகிர்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக அஸ்வின் செயல்பட்டால் பெரிய சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.தற்போது அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் 690 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

10 விக்கெட்

10 விக்கெட்

இதில் டெஸ்டில் 467 விக்கெட்டுகளும், ஒரு நாள் போட்டியில் 151 விக்கெட்டுகளும், டி20 கிரிக்கெட்டில் 72 விக்கெட்டுகளும் அடங்கும். இந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினால் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் படைப்பார்.இந்த சாதனையை ஏற்கனவே அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் படைத்திருக்கிறார்கள்.

 கும்ப்ளே ரெக்கார்ட்

கும்ப்ளே ரெக்கார்ட்

இதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் கும்ப்ளே 11 விக்கெட்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். தற்போது அஸ்வின் வெறும் 4 விக்கெட்டுகளை இந்த டெஸ்ட் போட்டியில் கைப்பற்றினால் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

அஸ்வின் கையில் வெற்றி

அஸ்வின் கையில் வெற்றி

மேலும் அவருடைய தரவரிசை புள்ளிகள் அதிகரித்து மீண்டும் தன்னுடைய முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அகமதாபாத் ஆடுகளம் தற்போது பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது. இதனால் போராடி தான் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய நிலைக்கு இந்திய வீரர்கள் இருக்கிறார்கள். இந்த போட்டியில் அஸ்வின் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும்.

Story first published: Thursday, March 9, 2023, 13:53 [IST]
Other articles published on Mar 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+