For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"தலைவர்" கபிலுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் "ஸ்பின் புயல்" அஸ்வின்!

செயின்ட் லூசியா: இந்தியாவின் ஸ்பின் புயல் ரவிச்சந்திரன் அஸ்வின், கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் கபில் தேவின் சாதனையை சமன் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து அஸ்வின் கலக்கி வருகிறார். பந்து வீச்சில் மிரட்டுகிறார், பேட்டிங்கில் பட்டையைக் கிளப்புகிறார்.

இந்தத் தொடரில் அவர் புதிய சாதனையைப் படைத்து வருகிறார். தொடர்ந்து நிகழ்த்தியும் வருகிறார்.

சூப்பர் பவுலர்.. சுப்ரீம் பேட்ஸ்மேன்

சூப்பர் பவுலர்.. சுப்ரீம் பேட்ஸ்மேன்

இந்தத் தொடரில் அவரே அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவரே அதிக ரன்களை அடித்த வீரரும் கூட. அடுத்தடுத்து இரண்டு சதங்கள் போட்டு அசத்தியுள்ளார் அஸ்வின்.

முதல் டெஸ்ட்டில் முதல் சதம்

முதல் டெஸ்ட்டில் முதல் சதம்

ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது ஒரு சதம் போட்டார் அஸ்வின். அதன் பின்னர் தற்போது செயின்ட் லூசியா டெஸ்ட் போட்டியில் இன்னொரு சதம் போட்டுள்ளார்.

2 முறை 5 விக்கெட் சாதனை

2 முறை 5 விக்கெட் சாதனை

அதேபோல இந்த டெஸ்ட் தொடரில் அவர் இதுவரை 2 முறை ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன் மூலம் அவர் கபில்தேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

2 ஐந்து விக்கெட் - 2 சதம்

2 ஐந்து விக்கெட் - 2 சதம்

கபில் தேவ், புவனேஷ் குமார் ஆகியோர்தான் 2 சதமும், 2 முறை ஐந்து விக்கெட்டுகளையும் ஒரு தொடரில் எடுத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது அஸ்வின் இணைந்துள்ளார்.

கபில் ஸ்பெஷல்

கபில் ஸ்பெஷல்

இதில் கபில் தேவ் ஸ்பெஷலானாவர். அவர் இரண்டு முறை இந்த சாதனையைச் செய்துல்ளார். புவனேஸ்வர் குமார் 2014ல் இந்த சாதனையைச் செய்தார்.

4 சதம்.. அதுவும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக

4 சதம்.. அதுவும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக

அஸ்வின் நான்கு டெஸ்ட் சதங்களைப் போட்டுள்ளார். நான்குமே மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக என்பது அஸ்வினின் சிறப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

Story first published: Thursday, August 11, 2016, 17:40 [IST]
Other articles published on Aug 11, 2016
English summary
India spinner R Ashwin has joins former legend Kapil Dev in test matches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X