For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னை To வெஸ்ட் இண்டீஸ்..! ஆனா விளையாட போவதில்லை…! பெஞ்சில் உட்கார வைக்கப்படும் தமிழக வீரர்..!

போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெறுவது சந்தேகம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் வரும் 22ம் தேதி டெஸ்ட் தொடர் துவங்குகிறது.

ஒருநாள் அணியில் சில ஆண்டுகளாக அஸ்வினுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப் பட்டு வருகிறது. அதற்கு மாறாக, டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இந்திய அணிக்காக அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

அவர்களே காரணம்

அவர்களே காரணம்

அவரது நீக்கம் அல்லது வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது இளம் பவுலிங் ஜோடியான குலதீப் மற்றும் சாஹல். இந்த இருவரும் பந்துவீச்சு மற்றும் அணித் தேர்வில் இவர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமையே அவரது நீக்கத்துக்கான பின்னணி என்று தகவல்கள் வெளியாகின.

குல்தீப் பந்துவீச்சு

குல்தீப் பந்துவீச்சு

இந்நிலையில் தற்போதைய டெஸ்ட் போட்டியிலும் அஸ்வினுக்கு இடம் கிடைப்பது தற்போது சந்தேகமாகி உள்ளது. அதற்கு காரணம் என்று கை காட்டப்படுவது குல்தீப் தான். அவரின் சமீபத்திய அட்டகாசமான பந்துவீச்சு.

ஜடேஜாவுக்கு வாய்ப்பு?

ஜடேஜாவுக்கு வாய்ப்பு?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் குல்தீப் சிறப்பாக பந்து வீசினார். அதனால் கோலி முதல் சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவையும், 2வதாக ரவீந்திர ஜடேஜாவையும் தேர்வு செய்ய உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாய்ப்பு சந்தேகமே

வாய்ப்பு சந்தேகமே

அதனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் அவரது அனுபவத்தை கருத்தில் கொண்டு போட்டியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Story first published: Tuesday, August 20, 2019, 15:29 [IST]
Other articles published on Aug 20, 2019
English summary
Ashwin may not be included in 1st test against west indies, sources said.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+