Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20ல 250 விக்கெட் சாதனைக்காக காத்திருக்காரு அதிரடி ஸ்பின்னர்... இன்னும் ஒரு விக்கெட் தான் இருக்காம்!

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 7வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

கடந்த ஐபிஎல் சீசனில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஆர் அஸ்வின் இணைந்துள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இவரது சாதனைகள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன.

இன்று 7வது போட்டி

இன்று 7வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 7வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் தன்னுடைய மகுடத்தில் மேலும் ஒரு கல்லை பொருத்த இந்திய ஸ்பின்னர் ஆர் அஸ்வின் காத்திருக்கிறார்.

சிறப்பான அஸ்வின்

சிறப்பான அஸ்வின்

கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்து, அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் அஸ்வின். அவர் தொடர்ந்து 5 விக்கெட்டுகள் சாதனையையும் செய்தார். தனது 29வது 5 விக்கெட்டுகள் சாதனையை செய்ததுடன் டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகள் சாதனையையும் சிறப்பாக பூர்த்தி செய்தார்.

250 விக்கெட்டுகள் சாதனை

250 விக்கெட்டுகள் சாதனை

இந்நிலையில் தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக அவர்பௌலிங் செய்யவுள்ளார். கடந்த சீசன் முதல் அவர் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார். இந்நிலையில் டி20 வடிவத்தில் 250 விக்கெட்டுகளை பூர்த்தி செய்ய அஸ்வினுக்கு இன்னும் ஒரு விக்கெட்டே பாக்கி உள்ளது. அதை இன்றைய போட்டியில் அவர் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

6வது பௌலர் அஸ்வின்

6வது பௌலர் அஸ்வின்

ஐபிஎல் போட்டிகளில் அவர் இதுவரை 139 விக்கெட்டுகளையும் 46 விக்கெட்டுகளை டி20 போட்டிகளிலும் மற்ற விக்கெட்டுகளை உள்ளூர் போட்டிகளிலும் எடுத்துள்ளார். ஐபிஎலில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள 6வது பௌலராக அஸ்வின் உள்ளார்.

நம்பிக்கையுடன் டெல்லி கேபிடல்ஸ்

நம்பிக்கையுடன் டெல்லி கேபிடல்ஸ்

லசித் மலிங்கா 170 விக்கெட்டுகளுடன் இதில் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அமித் மிஸ்ரா (160), பியூஷ் சாவ்லா (156), பிராவோ (154) மற்றும் ஹர்பஜன் சிங் (150) ஆகியோரை தொடர்ந்து ஆறாவது வீரராக அஸ்வின் உள்ளார். கடந்த சிஎஸ்கேவிற்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி கொண்டுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி அந்த வெற்றி கொடுத்துள்ள நம்பிக்கையுடன் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Thursday, April 15, 2021, 17:29 [IST]
Other articles published on Apr 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+