Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா மீது அஸ்வினுக்கு அப்படி என்ன கோபம்.. சிறந்த லெவன் அணியில் இடமில்லை

சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ரசிகர்களுக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பெற்ற வெற்றியின் மூலம் கிடைத்த ஹாங் ஓவர் இன்னும் போகவில்லை. இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது பார்ட் டைம் கிரிக்கெட் வீரராகவும் முழு நேர யூடியூபராகவும் மாறிவிட்டார்.

அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய வீரர்களை வைத்து சிறந்த பிளேயிங் லெவன் ஒன்றை அவர் தேர்வு செய்துள்ளார். அதில் யார் யாரை தேர்வு செய்திருக்கிறார் என்று தற்போது பார்க்கலாம். சாம்பியன்ஸ் டிராபி கனவு அணியில் அஸ்வின் தொடக்க வீரராக நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவையும் இங்கிலாந்து வீரர் பெண் டக்கட்டையும் சேர்த்து இருக்கிறார்.

champions Trophy 2025 Ashwin Rohit sharma 2025

இதேபோன்று அஸ்வின் மூன்றாவது வீரராக விராட் கோலிக்கும், நான்காவது வீரராக ஸ்ரேயாஸ் ஐயருக்கும் வாய்ப்பு வழங்கி இருக்கிறார். ஐந்தாவது வீரராக ஜோஸ் இங்கிலீஷ், ஆறாவது வீரராக டேவிட் மிலருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ள அஸ்வின், ஏழாவது வீரராக ஆப்கானிஸ்தான் வீரர் ஒமர்சாயை தேர்வு செய்து இருக்கிறார்.

எட்டாவது வீரராக நியூசிலாந்து அணியின் மைக்கேல் பிரேஸ்வெலை அஸ்வின் சேர்த்திருக்கிறார். இதேபோன்று ஒன்பதாவது வீரராக நியூசிலாந்து அணியின் ஹென்றியை தேர்வு செய்துள்ள அஸ்வின், பத்தாவது மற்றும் 11-வது வீரராக வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவை தேர்வு செய்துள்ளார். அஸ்வின் நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாண்ட்னரை தேர்வு செய்துள்ளார்.

அஸ்வினுடைய அணியில் இறுதிப்போட்டியில் 76 ரன்கள் குவித்த ரோகித் சர்மாவுக்கும் பந்துவீச்சில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமிக்கும் வாய்ப்பு வழங்கவில்லை. இறுதிப்போட்டியில் போது அஸ்வின் தெரிவித்த ஒரு கருத்துக்கு ரோகித் சர்மா ரசிகர்கள் அவரை கடுமையாக சாடினர். இதனால் கோபம் அடைந்த அஸ்வின் ரோகித் சர்மா ரசிகர்களை விமர்சித்திருந்தார். இந்த சூழலில் அஸ்வின் மீண்டும் ரோகித் சர்மாவின் பெயரை புறக்கணித்து இருப்பது அவர்களுடைய ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது. அஸ்வின் இதை வேண்டுமென்று செய்திருக்கிறார் என்று பலரும் அவர் மீது குற்றச்சாட்டி வருகின்றனர்.

Story first published: Thursday, March 13, 2025, 21:27 [IST]
Other articles published on Mar 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+