For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு கப் காபி.. கதை சொல்லும்..! சக வீரர்கள், பிசிசிஐயை வம்பிழுக்கும் பிரபல வீரர்? வைரல் போட்டோ

Recommended Video

Watch Video : Reason behind Ashwin not getting chance in test match?

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புறக்கணிக்கப்பட்ட அதிருப்தி இருக்கும் நிலையில், அஸ்வின் வெளியிட்டுள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களின் வரவுகளுக்கு பஞ்சமில்லை. அவர்களில் பலர் திறமையானவர்களாக இருக்கிறார்கள். சர்ச்சைகளை சட்டை பையில் வைத்துக் கொண்டு சுற்றி வருபவர்களாகவும் இருக்கிறார்கள்.

உதாரணமாக, தனியார் டிவி நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து பேசிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் கே.எல்.ராகுலும் பங்கேற்றார்.

தடை முடிந்தது

தடை முடிந்தது

அதில் ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து தாறுமாறாக விமர்சிக்க, ஆஸ்திரேலிய தொடரின் பாதியிலேயே அழைத்து தடை விதித்தது பிசிசிஐ. தற்போது தடை முடிந்து அவர்கள் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடி வருக்கின்றனர்.

அந்த போட்டோ

அந்த போட்டோ

இந் நிலையில், தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வரும் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், ரோகித் ஷர்மாவுடன் சேர்ந்து ராகுல், ஹர்திக் பாண்டியாவை செமையாக கலாய்க்கும் போட்டோவை ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவை அஸ்வின் தமது இன்ஸ்டா கிராமில் பகிர்ந்திருக்கிறார்.

காபி குடிக்கும் அஸ்வின்

அந்த போட்டோ பதிவில், சக வீரர்களான ரோகித் ஷர்மா, குல்தீப் யாதவ் ஆகியோருடன் அமர்ந்து காபி குடிக்கிறார் அஸ்வின். அதில், ஒரு கப் காபி இது வரை கேட்காத புதிய கதை சொல்லும், என்ன சொல்கிறீர்கள் ரோகித் ஷர்மா, குல்தீப்? என குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் கலாய்

ரசிகர்கள் கலாய்

இந்த பதிவை ரசிகர்கள் கெட்டியாக பிடித்துக் கொண்டனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் புறக்கணிக்கப்பட்டதால் தான் இந்த மாதிரி பதிவிட்டிருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்றொரு ரசிகர் தரப்போ, தென் ஆப்ரிக்க தொடரில் இடம் பெறுவதை தான் அஸ்வின் அப்படி கூறுகிறார் என்று கூறி வருகின்றனர்.

Story first published: Monday, September 9, 2019, 14:43 [IST]
Other articles published on Sep 9, 2019
English summary
Ashwin posted a photo in instagram with team mates which goes viral.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+