Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தவானோட ஆட முடியாது... விஜய் பாட்டுக்கு ஆட மறுத்த தமிழக ஸ்பின்னர்... காரணம் என்ன?

மும்பை : ஐபிஎல் 2021 தொடரில் சிஎஸ்கேவுடன் ஆடிய முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி.

நாளை மறுநாள் நடைபெறவுள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மோதவுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஷிகர் தவானுடன் தமிழக ஸ்பின்னர் ஆட மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பான வெற்றி பெற்ற டெல்லி அணி

சிறப்பான வெற்றி பெற்ற டெல்லி அணி

ஐபிஎல் 2021 தொடரின் தனது முதல் போட்டியில் சிஎஸ்கே அணியுடன் கடந்த சனிக்கிழமை மும்பையில் மோதிய டெல்லி கேபிடல்ஸ் அணி அபாரமான வெற்றியை பெற்றுள்ளது. கடந்த சீசனின் ரன்னர்-அப்பாக வந்த அந்த அணியின் பேட்டிங் மற்றும் பௌலிங் இந்த சீசனில் மேலும் சிறப்பாக மாறியுள்ளது.

வெற்றிக்கான தீவிரம்

வெற்றிக்கான தீவிரம்

அணியில் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறப்பான வீரர்கள் அதிகரித்துள்ளனர். கடந்த சீசனில் முதல் முறையாக இறுதிப்போட்டி வரை வந்து மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்ற டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் இந்த சீசனில் கோப்பையை வெல்லும் தீவிரம் காணப்படுகிறது.

ரசிகர்களை கட்டிப்போடும் வீரர்கள்

ரசிகர்களை கட்டிப்போடும் வீரர்கள்

இந்நிலையில் அணியில் என்டர்டெயின்மெண்டுக்கும் குறைவில்லாமல் உள்ளது. அவ்வப்போது அணியின் வீரர்கள் ஷிகர் தவான், அஸ்வின் உள்ளிட்டவர்கள் தங்களது நடனம் உள்ளிட்ட வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். ஐபிஎல் போட்டிகளின் மூலம் ரசிகர்களை கட்டிப்போடும் அவர்கள் இந்த வீடியோக்கள் மூலம் அவர்களை கவர்ந்து வருகின்றனர்.

தவானுடன் ஆட அஸ்வின் மறுப்பு

தவானுடன் ஆட அஸ்வின் மறுப்பு

இந்நிலையில் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு தங்களுடன் ஆட அஸ்வினிடம் ஷிகர் தவான் கேட்க, அவர் மறுத்துள்ளார். தான் ஏற்கனவே அந்த பாடலுக்கு இரண்டு முறை ஆடி வீடியோ பதிவிட்டுள்ளதாக கூறி அவர் மறுத்துள்ளார். இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியும் அவரை வற்புறுத்த அவர் ஆடியே விட்டார்.

விஜய்க்கு சவால்

இவர்கள் இருவருடன் இணைந்து மற்ற வீரர்களும் ஆடிய கலக்கல் நடனத்தை டெல்லி கேபிடல்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அவர்களின் ஆட்டம் நடிகர் விஜய்க்கே சவால்விடும் வகையில் அமைந்துள்ளது. இதையடுத்து தாங்கள் ஆட்டத்தில் மட்டுமினறி நடனத்திலும் சூப்பர்தான் என்று டெல்லி வீரர்கள் நிரூபித்துள்ளனர்.

Story first published: Tuesday, April 13, 2021, 19:31 [IST]
Other articles published on Apr 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+