எல்லாம் ஒரு காரணத்துக்காக தான் நடக்குது.. ப்ரித்வி ஷா காயம் பற்றி “சூசகமாக” சொன்ன அஸ்வின்
சிட்னி : ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன் இந்திய அணி ஒரு பயிற்சிப் போட்டியில் ஆடி வருகிறது. இந்த போட்டியில் ப்ரித்வி ஷாவுக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து அஸ்வினிடம் கேட்கப்பட்ட போது அவரது காயத்தால் மற்றொருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். எல்லாம் ஒரு காரணத்துக்காக தான் நடக்கிறது என கூறி உள்ளார்.

வாய்ப்பை இழந்தார் ப்ரித்வி
ப்ரித்வி ஷா பயிற்சிப் போட்டியில் கேட்ச் பிடிக்க முயற்சித்த போது கணுக்காலில் காயம் ஏற்பட்டு ஓய்வில் இருக்கிறார். அவரது காயம் குணமாக சில நாட்களாவது ஆகும் என கூறப்படுகிறது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளார் அவர்.

விரைவில் குணமாவார்
ப்ரித்வியின் காயம் பற்றி சக வீரர் அஸ்வினிடம் கேட்டதற்கு, "அவர் மிகவும் சோர்வாக உள்ளார். மிகவும் வீங்கி உள்ளது. அவர் முதல் முறை பீல்டிங் செய்ய வந்த போதே இப்படி நிகழ்ந்து விட்டது. விரைவில் குணமாவார் என நினைக்கிறேன். அவர் அதிகம் பேசவில்லை" என கூறினார்.

வெகுவாக பாதித்துள்ளது
மேலும், "இந்த காயம் அவரை வெகுவாக பாதித்துள்ளது. அவர் இளம் வீரர் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரில் ஆடலாம், டெஸ்ட் வாழ்வை எப்படி துவக்கலாம் என்ற கனவுகளோடு இருந்திருப்பார். அதனால், இது அவரை வெகுவாக பாதித்து விட்டது." என கூறினார் அஸ்வின்.

மற்றவர்களுக்கு வாய்ப்பு
"இது போன்று ஏற்கனவே நிகழ்ந்துள்ளதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். இது போன்ற சம்பவங்கள் எப்போதும் நிகழும். இது மற்றவர்களுக்கு வாய்ப்பு. எல்லாமே இங்கு ஒரு காரணத்துக்காக தான் நடக்கிறது என நான் நம்புகிறேன்" என கூறினார் அஸ்வின்.

ஆஸ்வின் சூசகம்
ஆரம்பத்தில் நன்றாக பேசிய அஸ்வின், கடைசியாக முடிக்கும் போது "எல்லாமே இங்கு ஒரு காரணத்துக்காக தான் நடக்கிறது" என கூறி இருக்கிறார். இதை பார்த்தால் அவர் சூசகமாக ஏதோ கூற வருகிறாரோ என்று தான் தோன்றுகிறது.

ரூட் கிளியர் ஆனது
குறிப்பாக ப்ரித்வி இல்லாத நிலையில் தற்போது துவக்க வீரர் இடத்திற்கு யார் களம் இறங்குவார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது ப்ரித்வியின் காயம். ரோஹித் சர்மா மற்றும் முரளி விஜய் துவக்க வீரர்களாக களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது. தன் தமிழ்நாட்டு கூட்டாளி முரளி விஜய்க்கு "ரூட் கிளியர்" ஆனதை தான் அஸ்வின் இப்படி கூறுகிறாரோ?
ப்ரித்வி ஷா காயம்.. ரோஹித் சர்மா, முரளி விஜய், ராகுல்.. ஆஸி. டெஸ்ட்டில் யாரை ஓபனிங் இறக்கலாம்?
பயிற்சி பயிற்சின்னு ப்ரித்வி ஷா காலை உடைச்சுட்டீங்களே!! முதல் டெஸ்டில் ப்ரித்வி ஷா இல்லை!!


Click it and Unblock the Notifications