Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1 ரன்னுக்கு சுமார் 1 மணி நேரம் காத்திருந்த அஸ்வின்... 99-ல் இருந்து சிக்ஸ் அடித்து சதம்!

செயின்ட் லூசியா: இந்தியா மேற்கிந்திய தீவுகளில் அணிகளிடையேயான 3-வது போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் சதமடித்தார். 99 ரன்களில் இருந்த அஸ்வின் 100-ரன்களை கடக்க சுமார் 1 மேணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், அஸ்வின் மற்றும் சஹா ஆகியோர் அடித்த சதத்தினால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 353 ரன்கள் குவித்தது.

அஸ்வின் சதம் ஆட்டத்தில் சுவாரசியத்தைக் கூட்டினாலும் அந்த சத்தத்தை எட்ட அவர் 99 ரன்களில் சுமார் 1 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

Ashwin waited nearly 1 hour to reach 100 from 99.

111-வது ஓவரில் இந்தியா 288 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்திருந்து. அப்போது அந்த ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்த அஸ்வின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 250 பந்துகளில் 99 ரன்களை எட்டினார். பிறகு அந்த ஓவரில் ரன் ஏதும் எடுக்காததால், அடுத்த ஓவரை சாஹா சந்தித்தார்.

அந்த ஓவரில் சாஹா சிங்கிள் தட்ட, மீதமிருந்த 2 பந்துகளில் அஸ்வின் ரன் எடுக்கவில்லை. இதனால், அஸ்வின் 256 பந்துகளில 99 ரன்கள் எடுத்து 100-ரன்களை எட்ட காத்திருந்தார்.

மீண்டும் அடுத்த ஓவரின் கடைசி பந்துதான் அஸ்வினுக்கு கிடைத்தது. அந்த பந்திலும் ரன் எடுக்க முடியாமல் போகவே, 257 பந்துகளில் 99 ரன்களுடன் காத்திருந்தார் அஸ்வின்.

தொடர்ந்து, 114, 115 என அடுத்த 2 ஓவர்களையும் சாஹாவே சந்தித்தார். இதையடுத்து, உணவு இடைவேளையும் வந்து விடவே, சாஹா 93 ரன்களுடனும், அஸ்வின் அதே 99 ரன்களுடனும் (257 பந்துகள்) உணவு இடைவேளைக்குச் சென்றனர்.

Ashwin waited nearly 1 hour to reach 100 from 99.

உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் ஓவரை அஸ்வின் ஆடவிருப்பதால் அவர் சதம் எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த ஓவரில் அஸ்வின் ரன் எடுக்கவில்லை. இதனால், அடுத்த ஓவரை சந்தித்த சஹா 2-வது பந்தில்1 ரன் எடுத்தார். சுழற்பந்துவீச்சாளர் சேஸ் வீசிய அந்த ஓவரை சந்தித்த அஸ்வின், யாரும் எதிர்பாராவிதமாக சிக்ஸர் அடித்து சதத்தை எட்டினார்.

இதனால், 99 ரன்களிலிருந்து சதத்தை எட்ட சுமார் 1 மணி நேரம் அஸ்வினும், இந்திய ரசிகர்களும் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. இதன் மூலம் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் தனது 4-வது சதத்தை பூர்த்தி செய்தனார். இந்த 4-சதங்களுமே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அஸ்வின் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தத் தொடரில் அஸ்வின் எடுக்கும் 2-வது சதம் இது என்பது சிறப்பு.

முடிவில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சாஹாவும் சதத்தைக் கடந்து 104 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் கிரேக் பிராத்வெயிட் 53 ரன்களுடனும், டேரன் பிராவோ 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Story first published: Thursday, August 11, 2016, 15:25 [IST]
Other articles published on Aug 11, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+