Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை - பும்ராவுக்கு பதில் யார் களமிறங்கலாம்.. பிளேயிங் லெவனில் 3 பேருக்கு இடையே போட்டி

மும்பை: ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை 8வது முறையாக வெல்லும் வாய்ப்புடன் இந்திய அணி உள்ளது.

இந்த நிலையில், நட்சத்திர வீரர் பும்ரா காயம் காரணமாக தொடரை விட்டு விலகிய நிலையில், எந்த வீரர் அவரது இடத்தை பிடிக்கலாம் என்று காணலாம்.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் புவனேஸ்வர் கமார், ஹர்சல் பட்டேல் தனது இடத்தை பூர்த்தி செய்துவிடுவார்கள்.

ரோகித் யுத்தி என்ன?

ரோகித் யுத்தி என்ன?

இதனால் பும்ரா இடத்தை இடம்பிடிப்பது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. தற்போது ரோகித் சர்மா 3 வேகப்பந்தவீச்சாளர், ஒரு ஆல்ரவுண்ட் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் 2 சுழற்பந்தவீச்சாளர் என்ற வரிசையில் இந்திய அணி வீரர்கள் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் சுழற்பந்துவீச்சை பலப்படுத்த ரோகித் நினைத்தால், பும்ரா இடத்துக்கு ஒரு சுழற்பந்துவீச்சாளர் வருவார்.

ரவி பிஸ்னாய்

ரவி பிஸ்னாய்

இந்தியாவுக்கு இதுவரை 15 டி20 போட்டியில் விளையாடி 15 விக்கெட்டுகளை பிஸ்னாய் வீழ்த்தி இருக்கிறார். ரன்களையும் கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்துவீசி வருகிறார். மேலும் சுழற்பந்தவீச்சுக்கு சாதகமான சூழலில் போட்டி நடைபெறுவதால், இவருடைய லெக் ஸ்பின் அணிக்கு தேவைப்படும்.

ஆர்ஸ்தீப் சிங்

ஆர்ஸ்தீப் சிங்

டி20 போட்டிக்கு எப்போதுமே இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முக்கியம். இதனால் ஆர்ஸ்தீப் சிங்கிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இதுவரை 6 சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய ஆர்ஸ்தீப் சிங் 9 விக்கெட்டுகளை வீழத்தி இருக்கிறார். இதில் ஓவருக்கு அவர் 6.34 ரன்களை தான் சராசரியாக கொடுத்திருக்கிறார்.

ஆவேஷ் கான்

ஆவேஷ் கான்

25 வயதான ஆவேஷ் கான், துல்லியமாக யாக்கர் லெங்த் பந்தகளை வீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை தர கூடியவர். 13 சர்வதேச டி20 போட்டியில் விளையாடி 11 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருக்கிறார். பும்ராவை போல் ஆவேஷ் கானையும் ரோகித் சர்மா, இறுதி ஓவர்களை வீச அழைக்கலாம். இதுவரை 38 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

Story first published: Sunday, August 14, 2022, 17:45 [IST]
Other articles published on Aug 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+