Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை மிரட்ட போகும் 4 பாகிஸ்தான் வீரர்கள்.. கட்டம் கட்டிய ரோகித் சர்மா.. வலையில் சிக்குவார்களா?

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்னும் சற்று நேரத்தில் மோத உள்ளது.

Recommended Video

IND vs PAK இந்திய வீரரை கண்டு மிரண்ட Pakistan கேப்டன் Babar Azam *Cricket

இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிட்டது. டாஸ் வென்று முதலில் பந்துவீசும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். இதனால் டாஸ் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இரு நாடுகளும் இருத்தரப்பு கிரிக்கெட் தொடரில் மோதுவதில்லை. இதனால் பல பாகிஸ்தான் வீரர்கள் குறித்து பழைய ரசிகர்களுக்கு பரிட்சையம் இருக்காது. இதனால், இன்றைய ஆட்டத்தில் கவனிக்க வேண்டிய 4 பாகிஸ்தான் வீரர்கள் குறித்து தற்போது காணலாம்.

ஷதாப் கான்

ஷதாப் கான்

பாகிஸ்தான் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷதாப் கான், தனது லெக் ஸ்பின்னால் எதிரணி வீரர்களுக்கு கடும் நெருக்கடி தரக்கூடியவர். பேட்டிங்கிலும் கீழ் வரிசையில் ஜடேஜா மாதிரி பேட்டிங் செய்ய கூடியவர். கடந்த டி20 உலக கோப்பையில் கூட இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர் வீசி 22 ரன்கள் விட்டு கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

நஷிம் ஷா

நஷிம் ஷா

பாகிஸ்தான் அணியில் ஷாகின் ஷா ஆப்ரிடி இல்லை என்றாலும் நஷிம் ஷா அந்த இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 19 வயதான அவர், பந்துவீச்சில் மிரட்டி வருகிறார். தனது 16 வது வயதிலேயே முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை நஷிம் ஷா விளையாடி இருக்கிறார். இவரை இந்தியா அதிகம் எதிர்கொண்டது இல்லை என்பது கொஞ்சம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

முகமது ரிஸ்வான்

முகமது ரிஸ்வான்

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையில் தூணாக விளங்க கூடியவர் முகமது ரிஸ்வான். சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என அனைத்தையும் அதிரடியாக ஆடி ரன் குவிப்பார். இவருடைய சிறப்பம்சமே, எந்த ஒரு ரிஸ்கும் எடுக்காமல் இதனை செய்வார். இவரை சீக்கிரம் ஆட்டமிழக்க வைக்க ரோகித் சர்மா திட்டம் தீட்டி வருகிறார்.

பாபர் அசாம்

பாபர் அசாம்

சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டியில் அனைத்திலும் அரைசதம் அடித்து நல்ல பார்மில் இருக்கிறார். பாபர் அசாமை எவ்வளவு சீக்கிரம் வீழ்த்துகிறோமோ, அந்த அளவுக்கு இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். ரிஸ்வான், பாபர் அசாம் கூட்டணியை வீழ்த்துவது தான் ரோகித் சர்மாவுக்கு தற்போது முதல் பொறுப்பு. அதறகு இந்தியா சாஹல் அல்லது ஆர்ஸ்தீப் சிங்கை வைத்து ரோகித் காய் நகர்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, August 28, 2022, 17:17 [IST]
Other articles published on Aug 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+