Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6 சிக்சர் விளாசிய ஆப்கான் வீரர்.. வங்கதேசத்தை நொறுக்கிய ஆப்கானிஸ்தான்.. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி

ஷார்ஜா: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வென்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Recommended Video

IND vs PAK Hardik Pandya-க்கு Kiss அடித்த Afghanistan ரசிகர்கள் *Cricket

இதன் மூலம் ஆசிய கோப்பை தொடரில் தொடர்ந்து 3வது முறையாக ஆப்கானிஸ்தானிடம் வங்கதேச அணி தோல்வியை தழுவியுள்ளது.

டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிபுல் ஹசனும், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து அதிர்ச்சி அளித்தார்.

தடுமாறிய வங்கதேசம்

தடுமாறிய வங்கதேசம்

இதனையடுத்து களமிறங்கிய தொடக்க வீரர்கள் முகமது நயிம் 6 ரன்களுக்கு, அனாமுல் ஹக் 5 ரன்களிலும், ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் கேப்டன் ஷகிபுல் ஹசன் 11 ரன்களிலும், முஸ்பிசுர் ரஹிம் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 28 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து மகமுல்லா மற்றும் மொஸ்தேக் ஹூசைன் நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தனர்.

127 ரன்களில் சுருண்டது

127 ரன்களில் சுருண்டது

எனினும் மகமுல்லா 25 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மொஸ்தேக் ஹூசைன் மட்டும் 48 ரன்கள் குவிக்க, 20 ஓவர் முடிவில் வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டு இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் முஜிபுர் ரஹ்மான் 4 ஓவர் வீசி 16 ரன்களை விட்ட கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சாதனை

சாதனை

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வத வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதே போன்று ரஷித் கான் 4 ஓவர் வீசி 22 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை ரஷித் கான் பிடித்தார். 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் குர்பாஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்

6 சிக்சர்

6 சிக்சர்

மற்றொரு தொடக்க வீரரரான ஹசரத்துலா சாஷாய் 11 ரன்களில் வெளியேற, களத்துக்கு வந்த இப்ராஹிம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 42 ரன்கள் சேர்த்தார். 14 ஓவரில் ஆப்கானிஸ்தான் 65 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கடைசி 6 ஓவரில் வெற்றிக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது நஜிபுல்லா 17 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்சர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும் இதன் மூலம் வங்கதேசம் அணி 18.3 ஓவரில் 131 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, August 30, 2022, 23:31 [IST]
Other articles published on Aug 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+