
யாருக்கு பயிற்சி?
டி20 உலகக் கோப்பை தொடர், டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஒரு பயிற்சி களமாக இருக்கும் என்று கூறப்பட்டது. பிறகு தான் தெரிந்தது, அது வீரர்களுக்கு இல்லை ரசிகர்களுக்கு என்று.. புரியவில்லையா, டி20 உலகக் கோப்பையிலும், இது போன்ற இந்திய அணி காலை வாரினால் நாம் சோகப்பட கூடாது அல்லவா, அதற்கான ஒரு பயிற்சி களம் தான் இது.

பெரும் ஏமாற்றம்?
ஆசிய கோப்பை தொடரில் பலமான அணியாக கருதப்பட்ட இந்தியா, 8வது முறையாக கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்திய அணி நிர்வாகம், தவறான யுத்திகளால் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு இன்றுடன் சேர்த்து இன்னும் 7 போட்டிகள் தான் உள்ளன.

அதிரடி மாற்றங்கள்
அதற்குள் இந்திய அணி தொடக்க வீரர்கள், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு என அனைத்து கோளாறுகளையும் சரி செய்ய வேண்டும். அதற்கான ஆரம்ப புள்ளியை ரோகித் சர்மா இன்றே செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இடதுகை பேட்ஸ்மேன் இல்லை என்று சப்பை கட்டு கட்டாமல் தினேண் கார்த்திக்கை அணியில் கொண்டு வருவது, ரிஷப் பண்ட் அல்லது சூர்யகுமாரை தொடக்க வீரராக கொண்ட வருவத, அணியில் தீபக் சாஹரை சேர்ப்பது என பல மாற்றங்கள் இன்றைய போட்டியில் நாம் எதிர்பார்க்கலாம்

பிளேயிங் லெவன்
1, ரோகித் சர்மா, 2, கேஎல் ராகுல், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா, 6, தினேஷ் கார்த்திக், 7, அக்சர் பட்டேல், 8, தீபக் சாஹர், 9, புவனேஸ்வர் குமார், 10,ஆர்ஸ்தீப் சிங், 11, சாஹல்


Click it and Unblock the Notifications











