Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா Vs பாகிஸ்தான் இன்று மோதல்.. மீண்டும் படை எடுக்கும் பாபர் ஆர்மி.. பழித் தீர்க்க ரோகித் ரெடி

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான ஆட்டமாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

Recommended Video

IND vs PAK போட்டியில் Pitch தான் கடும் சவால்

இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்தப் போட்டியில் பாபர் படையும், ரோகித் சர்மா படையும் பலப்பரீட்சை நடத்துகிறது. இதுவரை உலகக் கோப்பை தொடரில் 12 முறை மோதி பாகிஸ்தான் தோற்றது.

ஆனால், கடந்த முறை தான் முதல் முறையாக உலகக் கோப்பையில் பாகிஸ்தான் இந்தியாவை டி20 போட்டியில் வீழ்த்தியது. அதன் பிறகு 10 மாதத்திற்க பிறகு இரு அணிகளும் இப்போது தான் சந்திக்கின்றன.

டாஸ் முக்கியம்

டாஸ் முக்கியம்

துபாய் ஆடுகளத்தை பொறுத்த வரை, டாஸ் வென்று இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு தான் அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது. கடைசியாக விளையாடிய 11 போட்டியில், ஒரு போட்டியில் மட்டுமே முதலில் பேட் செய்த அணி வென்றது. இதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் பெரும் முக்கியத்துவத்தை பெறும். நேற்றைய ஆட்டத்தில் கூட ஆப்கான் பேட்டிங் செய்யும் போது ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமானது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் குறை

இந்தியாவின் குறை

இந்திய அணியை பொறுத்தவரை, கடந்த முறை அடைந்த தோல்வி பிறகு, விளையாடிய அனைத்து டி20 தொடரிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணியின் ஒரே குறை என்றால், ராகுலும், விராட் கோலியும், பல நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளதால், அவர்களுடைய பேட்டிங் எப்படி இருக்கும் என யாருக்கும் தெரியாது. மேலும் ஆடுகளம் தொய்வாக இருந்தால், இந்திய அணி வீரர்கள் கொஞ்சம் திணற வாய்ப்புள்ளது.

பாகிஸ்தான் பலம்

பாகிஸ்தான் பலம்

அப்படி இருக்கும் பட்சத்தில் தினேஷ் கார்த்திக் பங்க மிகவும் முக்கியம். ஆனால் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பதும் சந்தேமாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணியை பொருத்த வரையில், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஃபக்கர் சமான், ஆசிஃப் அலி போன்ற மிரட்டலான பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், பந்துவீச்சில் போதிய அனுபவம் பாகிஸ்தான் அணியில் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இந்திய உத்சேச அணி, 1, ரோகித் சர்மா, 2, கேஎல் ராகுல், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா, 6, ரிஷப் பண்ட்/ தினேஷ் கார்த்கிக், 7. ஜடேஜா, 8, புவனேஸ்வர் குமார், 9, ஆர்ஸ்தீப் சிங், 10, ஆவேஷ் கான்/ அஸ்வின், 11, சாஹல்

பாகிஸ்தான் உத்தேச அணி 1,பாபர் அசாம், 2, முகமது ரிஸ்வான், 3, ஃபக்கர் சமான், 4, ஆசிஃப் அலி, 5,இஃப்திகார் அகமது, 6, குஸ்தில் ஷா, 7, ஷதாப் கான், 8, முகமது நவாஸ்/உஸ்மான் காதிர், 9, ஷானவாஸ் தாஹானி/முகமது ஹஸ்னாயின், 10,ஹரிஸ் ராஃப், 11, நஷிம் ஷா

Story first published: Saturday, August 27, 2022, 23:38 [IST]
Other articles published on Aug 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+