
ரோகித் கேப்டன்சி
இதன் மூலம் ரோகித் சர்மாவின் டி20 கேப்டன்சி, விராட் கோலி மற்றும் தோனியை மிஞ்சும் அளவிற்கு உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதுவரை 37 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 31 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். உலகில் எந்தவொரு கேப்டனுக்கும் இல்லாத வகையில் 83.3% வெற்றி சதவீதத்தை வைத்துள்ளார்.

பாக்.சீனியர் கருத்து
இந்நிலையில் ரோகித் ஒரு பலவீனமான கேப்டன் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹஃபீஸ் கூறியுள்ளார். அதில், டாஸ் போடப்படும் நேரத்தில் ரோகித்தின் உடற்மொழியை பாருங்கள்,மிகவும் பலவீனமாகவும், குழப்பமாகவும் இருக்கும். ஆனால் ரோகித் சர்மா சிறப்பாக பேட்டிங் செய்துவந்த காலங்களில் இதுபோன்ற பதற்றம் இருந்தது கிடையாது. இதன் மூலம் அவருக்கு கேப்டன்சி அழுத்தம் இருப்பது தெரியவருகிறது.

சொதப்பல் ஃபார்ம்
கடந்த ஐபிஎல் தொடரில் சற்று மோசமாக விளையாடிய ரோகித் சர்மாவிடம், இன்று வரை பழைய அதிரடி ஆட்டங்களை பார்க்கவே முடியவில்லை. இந்தியாவின் ஆட்ட முறை மற்றும் பவுலிங் முறைகள் குறித்து நிறைய திட்டங்களை கூறுகிறார். ஆனால் அவர் கூறும் பல விஷயங்கள் ஆட்டத்தின் போது தென்படவே இல்லை. அவரின் கேப்டன்சி அங்கு இருப்பதாகவே எனக்கு தெரியவில்லை.

நம்பிக்கை இல்லை
ரோகித் சர்மா இதே பிரச்சினையுடன் நீண்ட காலம் கேப்டனாக செயல்படுவார் என எனக்கு தோன்றவில்லை. அழுத்தங்கள் காரணமாக அவரின் பேட்டிங் ஃபார்மும் சரியில்லாமல் தவிக்கிறார். சுதந்திரமே இல்லாமல் அவர் செயல்படுவதை பார்த்தால் அவர் நீண்ட நாள் விளையாடுவாரா என்றே தெரியவில்லை என முகமது ஹஃபீஸ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications