Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே கேட்ச் மிஸ்.. வில்லனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்.. பாகிஸ்தான் அபார வெற்றி.. இந்திய அணிக்கு சோகம்

துபாய்: ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Recommended Video

AsiaCup 2022 தொடரில் India அணிக்கு பாரபட்சமா? Pakistan முன்னாள் வீரர்கள் கேள்வி *Cricket

இதன் மூலம் லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக அடைந்த தோல்விக்கு தற்போது பாகிஸ்தான் அணி பழித்தீர்த்து கொண்டது.

இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, சாஹல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் 40 ரன்களுக்கு மேல் பந்துவீச்சில் விட்டு கொடுத்ததும் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தனது டிரேட் மார்க் ஷாட்களை ரோகித் சர்மா அடிக்க தொடங்கியதும் ராக்கெட் வேகத்தில் ஸ்கோர் உயர்ந்தது. மறுமுனையில் கேஎல் ராகுலும் தனது பழைய அதிரடியை காட்ட, இந்திய அணி 4.2 ஓவரில் 50 ரன்களை கடந்தது. ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் தலா 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாட முற்பட்டு 13 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

கோலி சாதனை

கோலி சாதனை

தினேஷ் கார்த்திற்கு பதிலாக சேர்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 14 ரன்கள் மட்டுமே சேர்க்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் டக் அவுட் ஆனார். ஒரு கட்டத்தில், ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் தனது பழைய ஆட்டத்தை காட்டி ரசிகர்களுக்கு விராட் கோலி உற்சாகத்தை அளித்தார். 35 பந்துகளில் விராட் கோலி அரைசதம் விளாசியதன் மூலம், சர்வதேச டி20 போட்டியில் அதிக முறை அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். விராட் கோலி 44 பந்துகளில் 60 ரன்களுக்கு ரன் அவுட்டாக, தீபக் ஹூடா 16 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.

ரிஸ்வான் அபாரம்

ரிஸ்வான் அபாரம்

இதனையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பாபர் அசாம் 14 ரன்களிலும், ஃபக்கர் ஷமான் 15 ரன்களிலும் ஆட்டமிழக்க, 3வது விக்கெட்டுக்கு ரிஸ்வான், நவாஸ் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். மறுபக்கம் ரிஸ்வான் 37 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

தவறவிட்ட கேட்ச்

தவறவிட்ட கேட்ச்

கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் பாகிஸ்தான் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது, ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் ஆசிப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஆர்ஸ்தீப் சிங் தவறவிட்டார். இது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புவனேஸ்வர்குமார் வீசிய 19வது ஓவரில் பாகிஸ்தான் 19 ரன்களை விளாசியது. இதனையடுத்து கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆர்ஸ்தீப் ஒரு விக்கெட்டை வீழ்த்த ஆட்டத்தில் மீண்டும் சூடு பிடித்தது. கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பாகிஸ்தான் டபுள்ஸ் ஓடி ஒரு பந்துகள் எஞ்சிய நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Monday, September 5, 2022, 0:57 [IST]
Other articles published on Sep 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+