Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நசீம் ஷா காயமானதால் இந்தியா வென்றதா.. பாக். ரசிகர்களின் விமர்சனம்.. ரவீந்திர ஜடேஜா சூப்பர் பதிலடி!

துபாய்: நசீம் ஷாவுக்கு காயம் ஏற்படவில்லை என்றால் இந்தியா தோல்வியை தழுவியிருக்கும் என்ற பாகிஸ்தான் ரசிகர்களின் கருத்துக்கு ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார்.

Recommended Video

Asia Cup 2022:Bangladesh-ஐ நொறுக்கிய Afghanistan! Super 4-க்கு Qualify ஆனது|Aanee's Appeal |*Cricket

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்திருந்தது.

148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து த்ரில் வெற்றி பெற்றது.

நசீம் ஷா பவுலிங்

நசீம் ஷா பவுலிங்

இந்திய அணியின் சேஸிங்கின் போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் பாகிஸ்தானின் இளம் பவுலர் நசீம் ஷா. இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுலை முதல் பந்திலேயே அவுட்டாகி அசத்தினார். இதே போல பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவை 18 ரன்களுக்குள் அவுட்டாக்கி வெளியேற்றினார்.

ரசிகர்கள் கருத்து

ரசிகர்கள் கருத்து

இப்படி சிறப்பாக பந்துவீசிய நசீம் ஷாவுக்கு ஆட்டத்தின் பாதியிலேயே காலில் காயம் ஏற்பட்டது. இதனால் பந்துவீச மிகவும் சிரமப்பட்டார். குறிப்பாக 19வது ஓவரில் காயத்துடன் அவர் வீசிய பந்தை ஜடேஜா சிக்ஸருக்கு விரட்டினார். ஒருவேளை நசீமுக்கு காயம் ஏற்படவில்லை என்றால் 19வது ஓவரில் விக்கெட்கள் சரிந்திருக்கும், இந்தியா தோல்வியடைந்திருக்கும் என பாகிஸ்தான் ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

 ஜடேஜாவின் பதிலடி

ஜடேஜாவின் பதிலடி

இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார். நசீம் ஷாவுக்கு காயம் ஏற்படாமல் இருந்திருந்தால் இந்தியா தோற்றிருக்கும் என அர்த்தம் கிடையாது. அதிகப்படியான வெப்பமாக இருந்த துபாயின் கால சூழல் இரு அணிகளுக்குமே பொதுவாக தானே இருந்தது. ஒரு அணிக்கு மட்டும் சாதகமாக இல்லை அல்லவா?.. இன்னும் அதிக இலக்கு இருந்திருந்தாலும் சரி, நசீம் ஷாவை விட பெரிய பவுலர் இருந்திருந்தாலும் கடைசி 2 ஓவர்களில் அழுத்தம் இருக்கதான் செய்யும்.

திட்டமே வேறு

திட்டமே வேறு

ஆட்டத்தில் நாங்கள் முடிந்தவரை 18 - 19வது ஓவர்களில் அதிக ரன்களை அடித்துவிட வேண்டும் என முடிவு செய்தோம். ஏனென்றால் கடைசி ஓவரில் அழுத்தம் அதிகமாக இருக்கும். அந்தவகையில் அதிர்ஷ்டவசமாக நாங்கள் செய்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளோம் என ஜடேஜா கூறினார்.

Story first published: Wednesday, August 31, 2022, 18:07 [IST]
Other articles published on Aug 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+