Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அந்த ஒரு விஷயம் சொதப்பிவிட்டது”.. பாகிஸ்தானுடனான தோல்விக்கு என்ன காரணம்.. ரோகித் தந்த விளக்கம்!

துபாய்: பாகிஸ்தான் அணியுடனான தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.

Recommended Video

Asia Cup Super 4: Pakistan-க்கு எதிரான India-வின் தோல்விக்கு என்ன Reasons? | *Cricket

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் பழிதீர்த்துக்கொண்டது.

பாகிஸ்தான் ஆட்டம்

பாகிஸ்தான் ஆட்டம்

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 60 ரன்களை குவித்து அசத்தினார். இதனை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி, 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு த்ரில் வெற்றி பெற்றது.

த்ரில் வெற்றி

த்ரில் வெற்றி

20வது ஓவரில் கூட விக்கெட் எடுத்திருந்த இந்திய அணி, 2 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற சூழலை உருவாக்கியிருந்தனர். இருப்பினும் வெற்றி அவர்கள் பக்கம் சென்றது. இந்திய அணியின் தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் விட்ட கேட்ச், 5 பவுலர்களுடன் சென்றது, மிடில் ஆர்டர் சொதப்பல் என பல்வேறு காரணங்களை ரசிகர்கள் அடுக்கி வருகின்றனர்.

 ரோகித் சர்மா விளக்கம்

ரோகித் சர்மா விளக்கம்

இந்நிலையில் இதற்கு கேப்டன் ரோகித் சர்மாவே விளக்கம் கொடுத்துள்ளார். இது அழுத்தமான போட்டி என்பது எங்களுக்கு தெரியும். இதனால் தான் ரிஸ்வான் - நவாஸ் பார்ட்னர்ஷிப் அமைத்த போதும் கூட நிதானம் காத்தோம். ஆனால் அந்த பார்ட்னர்ஷிப் சற்று பெரிதாகிவிட்டது தான் பிரச்சினை. அவர்களின் பேட்டிங் மிக சிறப்பாக அமைந்திருந்தது. அதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

அந்த 2 வீரர்கள்

அந்த 2 வீரர்கள்

எந்த மைதானமாக இருந்தாலும் 180+ என்பது நல்ல இலக்கு ஆகும். ஆனால் எப்படிபட்ட ஸ்கோரை டிஃபண்ட் செய்யும் போது அசால்ட்டான மனநிலையுடன் இருக்க கூடாது என்பதை கற்றுக்கொண்டுள்ளோம். ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அந்த சமயத்தில் அவுட்டாகியிருக்க தேவையில்லை. அது ஆட்டத்தின் போக்கை சற்று மாற்றியிருந்தது. எனினும் ஆக்ரோஷமான பேட்டிங் தான் என்ற திட்டத்தை செயல்படுத்தும் போது, இதுபோன்று நடப்பது சகஜம் தான் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Story first published: Monday, September 5, 2022, 8:55 [IST]
Other articles published on Sep 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+