Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெறும் 37 போட்டிகளில் இப்படியா??.. கோலி சாதனையை முறியடிக்கவுள்ள ரோகித் சர்மா.. எப்படி தெரியுமா??

துபாய்: விராட் கோலியின் முக்கிய சாதனையை முறியடிக்க இன்று கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

Recommended Video

IND vs PAK Hardik Pandya சொன்ன Chasing ரகசியம் *Cricket

ஆசிய கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதவுள்ளன.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்திய அணி

இந்திய அணி

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் போட்டியில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியுடன் மோதி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எனவே கத்துக்குட்டி அணியுடனான ஹாங்காங் உடன் இன்று நடைபெறும் போட்டியிலும் வெற்றி பெற்றுவிட்டால் சூப்பர் ஃபோர் சுற்றை இந்தியா உறுதி செய்துவிடும்.

முக்கியமான சாதனை

முக்கியமான சாதனை

இந்நிலையில் இப்போட்டியில் கோலியின் முக்கிய சாதனையை ரோகித் முறியடிப்பார். கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்திய டி20 அணியை வழிநடத்தி வரும் ரோகித் சர்மா இதுவரை 30 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். விராட் கோலியும் இதே 30 வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார். எனவே இன்று 31வது வெற்றியை பெற்றுவிட்டால், டி20ல் அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர்கள் பட்டியலில் கோலியை முறியடித்து ரோகித் முதலிடத்தை பிடிப்பார்.

வெறும் 7 தோல்விகள் தான்

வெறும் 7 தோல்விகள் தான்

ரோகித் சர்மா இதுவரை 37 டி20 போட்டிகளில் மட்டுமே கேப்டனாக செயல்பட்டு, வெற்று 7 தோல்விகளை தான் பெற்றுள்ளார். ஆனால் கோலி 30 வெற்றிகளை பெறுவதற்கு 50 போட்டிகள் ஆனது. இப்பட்டியலில் இந்திய முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி முதலிடத்தில் உள்ளார். அவர் 72 போட்டிகளில் 41 வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார்.

சர்வதேச ரெக்கார்ட்

சர்வதேச ரெக்கார்ட்

சர்வதேச அளவில் இங்கிலாந்தின் இயான் மோர்கன் மற்றும் ஆஃப்கானிஸ்தானின் அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆகியோர் 42 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.

இயான் மோர்கன் - 72 போட்டிகளில் 42 வெற்றிகள்

அஸ்கர் ஸ்டானிக்சாய் - 52 போட்டிகளில் 42 வெற்றிகள்

தோனி - 72 போட்டிகளில் 41 வெற்றிகள்

ஆரோன் பிஞ்ச் - 65 போட்டிகளில் 35 வெற்றிகள்

Story first published: Wednesday, August 31, 2022, 14:30 [IST]
Other articles published on Aug 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+