Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் தீராத குழப்பம்.. இந்திய ப்ளேயிங் 11ல் தெளிவில்லாமல் இருக்கும் ரோகித்..அப்படி என்னதான் காரணம்

துபாய்: பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் வெற்றி பெற்ற போதும், ரோகித் சர்மாவுக்கு முக்கிய குழப்பம் தீரவே இல்லை.

Recommended Video

Asia Cup-ல் Pakistan தோல்வி! India-வின் வெற்றிக்கான Reasons என்ன | Aanee's Appeal

ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

இந்திய அணி தனது முதல் போட்டியில் பலமான பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியது. எனினும் கத்துக்குட்டி அணியான ஹாங்காங்-ஐ எதிர்கொள்வதில் தற்போது சிரமப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இந்திய அணியின் காம்பினேஷன் சரியாக தான் உள்ளதா என்ற குழப்பம் தான். ரோகித் சர்மாவே இதற்கு இன்னும் தீர்வு காணாமல் உள்ளார்.

பெரிய குழப்பம்

பெரிய குழப்பம்

இந்திய அணியின் ஃபினிஷர் பணிக்காக ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே போட்டி நிலவுகிறது. பாகிஸ்தான் போட்டியில் அனுபவ வீரர் என்ற அடிப்படையில் தினேஷிற்கு வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் பண்ட்-ஐ இந்திய அணி மிஸ் செய்தது. ஏனென்றால் ஓப்பனிங் வீரர் கே.எல்.ராகுல் விரைவாக அவுட்டானதால், மிடில் ஆர்டரில் இடதுகை ஸ்பின்னர்களை சமாளிக்க ஒரு இடதுகை பேட்ஸ்மேன் இல்லை. இதனால் வேறு வழியின்றி ஜடேஜாவை டாப் ஆர்டரில் களமிறக்கினர். அன்று ஜடேஜாவால் இந்தியா தப்பியது.

காரணம் என்ன

காரணம் என்ன

ஹாங் காங் அணியில் அஃப்தாப் ஹுசைன், யாசீம் முர்தாசா, வஜித் ஷா என 3 இடதுகை ஸ்பின்னர்கள் உள்ளனர். அவர்கள் உலகதரம் வாய்ந்த பவுலர்கள் இல்லையென்றாலும், இடதுகை ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் வீரர்கள் இந்திய ப்ளேயிங் 11ல் குறைவு. எனவே இன்று ரிஷப் பண்ட்-ஐ அணிக்கு கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்படலாம். மற்றொரு தினேஷ் கார்த்திக் ஆபத்தில் இருந்து காப்பாற்றுவார் என டிராவிட் பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்.

ஏன் தினேஷ் தேவை

ஏன் தினேஷ் தேவை

இந்திய அணி மீண்டும் வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். இந்திய அணியின் டாப் ஆர்டரே சரிந்தாலும், எவ்வித பதற்றமும் இன்றி விளையாடக்கூடியவர் தினேஷ் கார்த்திக். கடைசி நேரத்தில் ரன்ரேட்டை மிக வேகமாக அதிகரிப்பார். கடந்த போட்டியிலேயே அவருக்கு பேட்டிங்கில் சரியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே ஹாங்காங் போட்டியில் அவர் விளையாடி பயிற்சி பெற்றால் தான் மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொள்ள முடியும்.

Story first published: Wednesday, August 31, 2022, 10:09 [IST]
Other articles published on Aug 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+