Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அணிக்குள் என்ட்ரி தரும் ஹூடா.. பாக்.எதிராக டிராவிட் மெகா ஸ்கெட்ச்.. இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்கலையே??

துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ராகுல் டிராவிட் மெகா ஸ்கெட்ச் போட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Recommended Video

AsiaCup 2022 Rohit Sharma-க்கு Captaincy பயம் வந்துடுச்சி - Mohammed Hafeez *Cricket

ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது.

ஆசிய கோப்பை போட்டி

ஆசிய கோப்பை போட்டி

மிகவும் முக்கியமான இந்த போட்டியில் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ரவீந்திர ஜடேஜா இல்லாதது தான். காயம் காரணமாக அவர் விலகியதால், மாற்று வீரராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற குழப்பம் உள்ளது. இந்நிலையில் அவருக்கு மாற்றாக ஒரு ஸ்பின்னர் மட்டுமல்லாது மேலும் ஒரு கூடுதல் ஸ்பின்னரையும் சேர்க்க ராகுல் டிராவிட் திட்டமிட்டுள்ளார்.

பவுலிங் யூனிட்

பவுலிங் யூனிட்

ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்று வீரராக ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாய் களத்தில் நல்ல அனுபவம் உள்ள அஸ்வினால், பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் கொடுக்க முடியும். ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட்டாக ஆவேஷ் கானை நீக்கிவிட்டு, தீபக் ஹூடாவை அணிக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளது தான்.

என்ன காரணம்

என்ன காரணம்

பாகிஸ்தான் அணி கடந்த 2 போட்டிகளிலும் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறினர். துபாய் பிட்ச்-ம் அதற்கேற்றார் போலவே ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைந்து வருகிறது. அப்படி பார்த்தால் தீபக் ஹூடா, அஸ்வின் மற்றும் யுவேந்திர சாஹல் ஆகிய 3 பேருமே 3 விதமான ஸ்பின்னர்கள் ஆவர். வெவ்வேறு வகையான பவுலிங்கால் பாகிஸ்தான் அணி திணறும்.

 வித்தியாச படை

வித்தியாச படை

இதன் மூலம் அஸ்வின், யுவேந்திர சாஹல், தீபக் ஹூடா என 3 ஸ்பின்னர்கள் மற்றும் அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா என 3 வேகப்பந்துவீச்சாளர்கள் என மொத்தமாக 6 பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இதிலும் ஓவர்களில் பல திட்டங்களை டிராவிட் வைத்துள்ளதாக தெரிகிறது.

Story first published: Sunday, September 4, 2022, 16:40 [IST]
Other articles published on Sep 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+